'உயிர்போகும் தருணத்திலும்'... 'தங்கையை காப்பாற்ற'... '5 வயது சிறுமி செய்த காரியம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உயிருக்குப் போராடும் தருணத்திலும், தனது தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமியின் புகைப்படம் காண்போரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'உயிர்போகும் தருணத்திலும்'... 'தங்கையை காப்பாற்ற'... '5 வயது சிறுமி செய்த காரியம்'!

சிரியாவின் மேற்கு இட்லிப்பில் உள்ள அரிஹா என்ற இடத்தில் கிளர்ச்சிப்படைக்கு எதிராக அரசு ஆதரவு ரஷ்ய படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் வீடு ஒன்றின் 5-வது தளத்தில் இருந்த குடும்பத்தில் தாய் அஸ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ரிஹாம், தனது 7 மாத தங்கை துகா-வின் டி சர்ட்-ஐ கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் உயிர்பிழைத்தது.

மனைவியை இழந்து, இரு குழந்தைகளும் உயிருக்குப் போராடுவதைக் கண்டும், உடனே மீட்க முடியாமல் பரிதவித்துக் கதறும் தந்தையின் காட்சிகள் காண்போரையும் கலங்க வைக்கிறது. இந்த விபத்தில் 7 மாத குழந்தை பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. தனது உயிரே பறிபோகும் தருவாயிலும் நெருக்கடியான சூழலில் தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி ரிஹாம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

SYRIA, WAR, HEARTBREAKING