சுற்றுலா விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் பலி, ஒருவர் மாயம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் 2 சுற்றுலா விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில், 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மாயமாகியுள்ளார்.

சுற்றுலா விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் பலி, ஒருவர் மாயம்!

வான்கூவரிலிருந்து அங்கோரேஜ் வரை ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் 7 நாள் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள கடலில்,  இடையில் கெட்சிகன் என்ற இடத்தில் சொகுசுக் கப்பல் சென்றுகொண்டிருந்தது.

அங்கு தரை, கடல் இரண்டிலிருந்தும் மேலெழந்து தரையிறங்க கூடிய Seaplane எனப்படும் சிறு விமானங்கள் பிரபலமானவை.  சுற்றுலாப் பயணிகளை அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களுக்கு அந்த வகை விமானங்கள் மூலம் அழைத்துச் செல்வதை சில கரையோரக் கேளிக்கை விடுதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.

கப்பலில் இருந்து கடலில் மிதக்கும் விமானத்தில் அலாஸ்கா உள்ள கெட்சிகன் என்ற இடத்தை சுற்றிப்பார்க்க 10 பயணிகள் சென்றனர். அதே வேளையில் 4 பேர் கொண்ட வேறு சுற்றுலாக் குழுவினர் மற்றொரு மிதக்கும் விமானத்தில் பயணித்துக்கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மிதக்கும் விமானங்களும் நடுவானில் மோதிக்கொண்டன.

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மாயமான மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் 10 பேர் காயமடைந்ததாகவும், அதில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்தாகவும் கடற்படை அதிகாரிகள் கூறினர். விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

COLLIDE, ACCIDENT, ALASKA