"ஸ்மார்ட் வாட்ச் பேட்டரி சூடாகி வெடிச்சுரும்.. யாரும் Use பண்ணாதீங்க.." பயனாளர்களை எச்சரித்த பிரபல நிறுவனம்.. பரபரப்பு அறிவிப்பு
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய நவீன கால உலகத்தில், நம்மை சுற்றி பல எலக்ட்ரானிக் பொருட்கள் நிரம்பி கிடக்கின்றன.
சரியான நேரத்தில் எழவும், தண்ணீர் குடிப்பது, நாம் நடக்கும் தூரத்தை அறிவது, உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு என எதை வேண்டுமானாலும் நாம் தெரிந்து கொள்ள, இன்றைய காலத்தில், ஸ்மார்ட் வாட்ச் முக்கிய விஷயமாக உள்ளது.
இன்று பல நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் தயாரித்து வரும் நிலையில், Fitbit என்ற நிறுவனமும் ஸ்மார்ட் வாட்சுகளை உலகளவில் தயாரித்து வருகிறது.
ஏராளமான புகார்கள்
அமெரிக்காவில், மொத்தம் 10 லட்சம் Fitbit ஸ்மார்ட் வாட்சுகளும், பிற நாடுகளில் 7 லட்ச வாட்சுகளும் விற்பனையாகி உள்ளது. இந்நிலையில், Fitbit ஸ்மார்ட் வாட்சுகளின் பேட்டரி திடீரென சூடாகி, வெடித்து சிதறுவதாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து அமெரிக்காவின் நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையத்திற்கு ஏராளாமான புகார்கள் வந்துள்ளது.
திரும்ப பெறும் Fitbit
இதனைத் தொடர்ந்து, Fitbit நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அந்த ஸ்மார்ட் வாட்சுகளை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள நிலையில், விற்பனை செய்யப்பட்ட சுமார் 17 லட்சம் ஸ்மார்ட் வாட்சுகளையும் திரும்ப வாங்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தான் முக்கியம்
இதற்கான பணமும் Refund செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெடித்து சிதறுவதாக அதிக புகார்கள் எழுந்த நிலையில், எங்களின் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தான் Fitbit நிறுவனத்தின் முதன்மை பெறும் முன்னுரிமையாகும் என குறிப்பிட்டு, தங்களின் வாட்சுகளை திரும்ப பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், எப்படி திரும்ப தங்களின் ஆர்டர்களை கொடுப்பது உள்ளிட்ட விவரத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்