வலையில் சிக்கிய ஆசியாவிலேயே மிகப்பெரிய திருக்கை மீன்..யம்மாடி எவ்ளோ பெருசு..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கம்போடியா நாட்டில் மீனவர் ஒருவர் ஆசியாவிலேயே மிகப்பெரிய திருக்கை மீனை பிடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

வலையில் சிக்கிய ஆசியாவிலேயே மிகப்பெரிய திருக்கை மீன்..யம்மாடி எவ்ளோ பெருசு..

Also Read | "இதை மட்டும் செய்யுங்க.. அடுத்து கல்யாணம் தான்".. 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி.. மேட்ரிமோனியில் நடந்த விபரீதம்..!

மிகவும் அரிய திருக்கை மீன்

கம்போடியா நாட்டின் வடகிழக்கு மாகாணமான ஸ்டங் ட்ரெங்கின்-ல் இருக்கிறது மேகாங் நதி. அங்குள்ள மக்களுக்கு இந்த நதியில் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர், மீனவர் வீசிய வலையில் மிகப்பெரிய stingray எனப்படும் திருக்கை மீன் சிக்கியுள்ளது. இதனால் ஆச்சரியமடைந்த மீனவர் இந்த தகவலை அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, மீனவர் பிடித்த திருக்கை மீனை பார்வையிட சர்வதேச மீன் நிபுணர் குழுவினர் அந்தப் பகுதிக்கு வந்தனர். அப்போது மீனின் எடை மற்றும் அளவுகள் பரிசோதிக்கப்பட்டன. இதனையடுத்து அந்த மீன் 13 அடி அகலமும், 180 கிலோ எடையும் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fishermen catch an endangered giant stingray fish

மீண்டும் தண்ணீரில்

இந்த திருக்கை மீன் மிகவும் அரியவகை என்பதால் மீண்டும் நீரிலேயே அதனை விட்டுவிடுமாறு அதிகாரிகள் தெரிவிக்க, அந்த மீனவரும் அதன்படியே செய்திருக்கிறார். அதிகாரிகள் இதுபற்றி பேசுகையில்," தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய stingray மீன் இதுதான். இந்த நதி பல்லாயிரக்கணக்கான உயிர்களின் ஆதாரமாக திகழ்கிறது. அரியவகை மீனை மீண்டும் அதன் வாழ்விடத்திற்கு செல்ல அனுமதித்திருக்கிறோம்" என்றார்.

Fishermen catch an endangered giant stingray fish

மேகாங் நதி

அமேசான் நதிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக அதிக உயிர்கள் வாழும் நதியாக அறியப்படுகிறது இந்த மேகாங் நதி. இங்கே 1,000 க்கும் மேற்பட்ட வகையான மீன்கள் வாழ்கின்றன. 4,350 கிமீ நீளம் கொண்ட மேகாங் ஆறு தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக நீளமானதாகும். சீனாவில் தோன்றி திபெத் வழியாக, மியான்மர்-லாவோஸ் எல்லைக்குள் சென்று பின்னர் தாய்லாந்து நாட்டிற்குள் பயணித்து கம்போடியா மற்றும் வியட்நாம் வரை நீண்டுள்ளது இந்த பிரம்மாண்ட ஆறு.

Fishermen catch an endangered giant stingray fish

அமெரிக்காவை மையமாகக்கொண்ட குழு ஒன்று இந்த ஆற்றின் உயிரியல் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ராட்சச திருக்கை மீனையும் இந்த குழு பார்வையிட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

FISHERMEN, CATCH, STINGRAY FISH, திருக்கை மீன், கம்போடியா

மற்ற செய்திகள்