Tiruchitrambalam Mobile Logo Top
Viruman Mobiile Logo top

சட்டுன்னு அதிகரித்த கொரோனா பாதிப்புகள்.. சீன அரசு எடுத்த முடிவு.. பரபரப்பான உலக நாடுகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் சமீப வாரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கடல் வாழ் உயிரினங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய துவங்கியுள்ளனர் அந்நாட்டு அதிகாரிகள். இது உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

சட்டுன்னு அதிகரித்த கொரோனா பாதிப்புகள்.. சீன அரசு எடுத்த முடிவு.. பரபரப்பான உலக நாடுகள்..!

Also Read | இந்தியா முழுவதும் டிராவல் செஞ்சு கின்னஸ் சாதனை.. ஆத்தாடி 3 மாசத்துக்குள்ள இவ்வளவு கிலோமீட்டரா.?

கொரோனா

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியில் இருந்து பரவியதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ், உலகெங்கிலும் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களிலேயே உலக நாடுகள் முழுவதும் பரவிய இந்த வைரஸ், லட்சக்கணக்கான உயிரிழப்பிற்கும் காரணமாக அமைந்தது. இதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை பல முன்னணி நிறுவனங்கள் உருவாக்கின. இவை புழக்கத்திற்கு வந்த பின்னர் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. ஆகவே, உலக நாடுகள் அனைத்தும் தங்களது நாட்டு மக்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

fish and crabs undergo Covid19 tests amid rise in cases in China

வைரஸ் கண்காணிப்பு

சீனாவின் தென்கிழக்கு புஜியான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான ஜியாமென்-ல் உள்ள மீனவர்களுக்கு தினந்தோறும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவர்களிடம் இருக்கும் மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கும் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்யும் புகைப்படங்கள் சமூக வலை தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஜியாமென் நகரத்தில் கடந்த ஜூலை மாதமே அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சட்ட விரோதமாக மீன் பிடித்தலை செய்துவரும் மீனவர்கள் வெளிநாடுகளில் இருந்து வைரசால் பாதிக்கப்பட்ட மீன்களுடன் திரும்புகிறார்களா? என்பதை கண்டறிய அதிகாரிகள் இதுபோன்ற பரிசோதனைகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

fish and crabs undergo Covid19 tests amid rise in cases in China

உணவுப் பொருட்கள்

இது ஒருபுறம் என்றால் குளிர்விக்கப்பட்ட உணவுப் பொருட்களில் வைரஸ்கள் உயிருடன் இருக்கும் என்பதால் ஒவ்வொரு சூப்பர் மார்க்கெட்டிலும் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.  இருப்பினும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்,  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் 2021 ஆம் ஆண்டில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தன. அதில் உணவு மற்றும் பேக்கேஜிங் மூலமாக வைரஸ் பரவுதலுக்கான வலுவான ஆதாரம் இல்லை எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | விபத்துல சிக்கி ஆளில்லாத தீவுல மாட்டிக்கொண்ட நபர்.. உயிரை காப்பாத்த 5 நாளா அவர் செஞ்சதை கேட்டு திகைச்சுப்போன மக்கள்..!

CHINA, FISH, CRABS, FISH AND CRABS UNDERGO COVID19 TESTS

மற்ற செய்திகள்