இதுக்காகவா 22 கோடி.. டிவிட்டரின் முதல் மெசேஜ் NFT ஐ வாங்கிய தொழிலதிபருக்கு வந்த சோதனை.. இப்போ இவ்வளவு இறங்கிடுச்சே..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

டிவிட்டரில் பகிரப்பட்ட முதல் மெசேஜ்-ன் NFT ஐ ஏலத்தில் விட முயற்சித்த உரிமையாளர் தற்போது கவலையில் ஆழ்ந்துள்ளார்.

இதுக்காகவா 22 கோடி.. டிவிட்டரின் முதல் மெசேஜ் NFT ஐ வாங்கிய தொழிலதிபருக்கு வந்த சோதனை.. இப்போ இவ்வளவு இறங்கிடுச்சே..!

Also Read | "இப்போ நான் ரொம்ப டேஞ்சரான ஆளு".. இம்ரான் ஆவேசம்.. என்ன ஆச்சு?

NFT

மனிதகுலம் தோன்றியது முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் உலகை ஸ்தம்பிக்க செய்திருப்பதுதான் இந்த NFT எனப்படும் Non-Fungible Token. இந்த தொழில்நுட்பம் மூலமாக மக்கள் தங்களது பிரத்யேக படைப்புகளை டிஜிட்டல் வடிவில் மாற்றி விற்பனை செய்யலாம்.

First Tweet NFT Listed For 48 Million USD Highest Bid At 280 USD

டிவிட்டரின் முதல் மெசேஜ்

பிரபல சமூக வலைதளமான டிவிட்டரில் பகிரப்பட்ட முதல் மெசேஜ் "just setting up my twittr" என்பதுதான். 2006 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி அந்த நிறுவனத்தினை துவங்கியவரான Jack Dorsey தான் இந்த மெசேஜை பகிர்ந்திருந்தார். இந்த சிறப்பு வாய்ந்த ட்வீட்டை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கிரிப்டோ தொழிலதிபரான சினா எஸ்தாவி 2.9 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் 22 கோடி) வாங்கினார்.

First Tweet NFT Listed For 48 Million USD Highest Bid At 280 USD

இந்நிலையில் எஸ்தாவி கடந்த வாரம் $48 மில்லியனுக்கு இந்த NFT ஐ ஏலத்தில் விற்க இருப்பதாக அறிவித்தார். இதற்கான ஏலமும் நடைபெற்று வந்தது. கோடிக்கணக்கில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த NFT ஐ வாங்க மக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 280 டாலருக்கு ஒருவர் விண்ணப்பித்திருக்கிறார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

விற்கமாட்டேன்

ஏலம் குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில்,"இந்த NFTயை (உலகின் முதல் ட்வீட்) விற்று, அதில் கிடைக்கும் 50% வருமானத்தை ($25 மில்லியன் அல்லது அதற்கு மேல்) Give Directly என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

First Tweet NFT Listed For 48 Million USD Highest Bid At 280 USD

தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு கணிசமான தொகையை அளிக்கவே இந்த NFT ஐ ஏலத்தில் விட முடிவெடுத்ததாகவும், நல்ல தொகை கிடைக்காவிட்டால் இதனை விற்கமாட்டேன் எனவும்  எஸ்தாவி தற்போது தெரிவித்திருக்கிறார். இந்த ஏலம் இரண்டு நாட்களில் முடிவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

22 கோடிக்கு வாங்கிய  NFT, 21 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்ட சம்பவம் குறித்து பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

Also Read | "என்ட பேரு ஸ்டாலின்" - இவ்ளோ அழகா மலையாளத்தில் சம்சாரிக்குறாரே... ட்ரெண்ட் ஆகும் முதல்வரின் பேச்சு

NFT, FIRST TWEET NFT, USD HIGHEST BID, NON-FUNGIBLE TOKEN

மற்ற செய்திகள்