‘ஆமா.. உக்ரைன் சொன்னது உண்மைதான்’.. முதல் முறையா அந்த விஷயத்தை ஒப்புக்கொண்ட ரஷ்யா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் நாட்டு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

‘ஆமா.. உக்ரைன் சொன்னது உண்மைதான்’.. முதல் முறையா அந்த விஷயத்தை ஒப்புக்கொண்ட ரஷ்யா..!

"உலக நாடுகள் எதிர்ப்பை மீறியும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க".. ‘முக்கிய பதவி பறிப்பு’.. புதினுக்கு ஷாக் கொடுத்த அமைப்பு..!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 4 நாட்களுக்கும் மேலாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. அதில் உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த போரில் 300-க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டு மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ரஷ்யா தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, இரு தரப்பிலும் சுமார் 4300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு நேற்று தெரிவித்திருந்தது. தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் இல்லை எனக் கூறி வரும் ரஷ்யா இதற்கு ரஷ்யா எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தது.

இந்த நிலையில் உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மைதான் என ரஷ்யா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திபில் பேசிய ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் இகோர் கொனஷெங்கோவ், ‘தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மைதான். பல வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஆனாலும், உக்ரைன் தரப்பை விட எங்கள் பாதிப்புகள் பல மடங்கு குறைவுதான்’ என்று அவர் தெரிவித்தார். ஆனாலும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து ரஷ்யா எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் பனி.. 20 கி.மீ நடந்தே போனோம்.. அங்க போன அப்பறம்தான் அந்த விஷயமே தெரிஞ்சது.. உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்..!

RUSSIA, UKRAINE, RUSSIA SPOKEN, PUTIN, உக்ரைன், ரஷ்யா

மற்ற செய்திகள்