'2019-ல் விளையாட்டு வீரர்களுக்கு வந்த மர்ம நோய்'... 'சீனா எப்போ இந்த பயங்கரத்தை செஞ்சுது'?... 'இத சொல்லல என் மனசாட்சி சும்மா விடாது'... நெஞ்சை உலுக்கும் தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விளையாட்டு வீரர்களுக்கு மர்மக் காய்ச்சல் வந்த நிலையில், அதுகுறித்து எந்த பரிசோதனையும் செய்யப்படவில்லை.

'2019-ல் விளையாட்டு வீரர்களுக்கு வந்த மர்ம நோய்'... 'சீனா எப்போ இந்த பயங்கரத்தை செஞ்சுது'?... 'இத சொல்லல என் மனசாட்சி சும்மா விடாது'... நெஞ்சை உலுக்கும் தகவல்!

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவில் உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகள் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் தான் சீனா திட்டமிட்டு கொரோனாவை பரப்பியதாக , அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சீன நாட்டை சேர்ந்த முன்னாள் சீன கம்யூனிஸ்ட் கட்சியினரான Wei Jingsheng.

first superspreader Covid event occurred in Wuhan Military Games

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவில் நடத்தப்பட்ட உலக இராணுவ விளையாட்டுப்போட்டிதான் முதன்முதலில் கொரோனா பரவகாரணமாக இருந்த superspreader நிகழ்ச்சி என்று கூறியுள்ளார் Jingsheng. திட்டமிட்டு இது தான் சரியான தருணம் என அந்த விளையாட்டுப் போட்டியின்போது கொரோனாவை சீனா பரப்பிய நிலையில், அந்த போட்டியில் கலந்துகொள்வதற்காகச் சீனா வந்திருந்த 9,000 சர்வதேச விளையாட்டு வீரர்களில் சிலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டதாக Jingsheng கூறியுள்ளார்.

ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலாக நடக்கவில்லை. அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகும். இராணுவ விளையாட்டுப் போட்டிகளின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு வருவார்கள் என்பதால், சீன அரசு அதை கொரோனா வைரஸைப் பரப்புவதற்கு ஏற்ற தருணமாகப் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என Jingsheng அடித்துக் கூறுகிறார்.

first superspreader Covid event occurred in Wuhan Military Games

உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சோதனைகளைச் சீனா மேற்கொண்டு வந்தது குறித்தும் எனக்குத் தெரியும் என Jingsheng கூறியுள்ள நிலையில், அவரது கூற்றுக்களை அமெரிக்க மாகாணத் துறைக்கான முன்னாள் சீன ஆலோசகரான Miles Yu என்பவரும் ஏற்றுள்ளார். அந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதோடு, கொரோனா போன்ற அறிகுறிகள் அவர்களுக்குக் காணப்பட்டும், வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை எனக் கூறுகிறார் Miles Yu.

நடந்த சம்பவங்கள் குறித்து 2019-ம் ஆண்டே தான் ட்ரம்ப் அரசிலிருந்த மூத்த அதிகாரி ஒருவரிடம் விவரமாகக் கூறிய நிலையில், அவர் அதனை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என வேதனையுடன் Jingsheng கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்