'இனிமேல் ரொம்ப சிம்பிள்'... 'கொரோனா பரிசோதனை செய்ய புது டெக்நிக்'... சில நிமிடங்களில் ரிசல்ட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

யாஸ் தீவு மற்றும் முசாபா பகுதிகளில் முதலில் இந்த கருவியைப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

'இனிமேல் ரொம்ப சிம்பிள்'... 'கொரோனா பரிசோதனை செய்ய புது டெக்நிக்'... சில நிமிடங்களில் ரிசல்ட்!

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இரண்டாவது அலை பல நாடுகளை வாட்டி வதைத்து வரும் நிலையில்,  கொரோனா மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா பரிசோதனையை எளிமையாக்கும் விதமாக அபுதாபியில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

First glimpse of Abu Dhabi's facial scanners for Covid-19 in action

அபுதாபியைச் சேர்ந்த இ.டி.இ ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் தான் இந்த ஃபேஷியல் ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது. அபுதாபி அரசு இதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுள்ளது. அங்குள்ள ஷாப்பிங் மால்களில் இந்த கருவி நேற்று முதல் பயன்பாட்டுக்கு உள்ளது. மால்களுக்கு வரும் மக்கள் இந்த கருவியின் மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

யாஸ் தீவு மற்றும் முசாபா பகுதிகளில் முதலில் இந்த கருவியைப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அங்கு சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 90சதவீதம் தொற்றுடையவர்களிடம் இருந்து மிகத்துல்லியமான முடிவுகள் பெறப்பட்டது என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்கேனரை பயன்படுத்தலாம். அந்த இ.டி.இ உருவாக்கியுள்ள அப்ளிக்கேஷன் மொபைலில் இருக்க வேண்டும்.

First glimpse of Abu Dhabi's facial scanners for Covid-19 in action

இந்த ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகிறது. நமது உடலில் வைரசின் புரத பொருளான ஆர்.என்.ஏ. இருப்பது தெரிந்தால் மின்காந்த அலையின் வீச்சில் மாற்றம் ஏற்படும். ஒரு கருவியின் உதவியுடன் இந்த அப்ளிகேஷன் செயல்படுகிறது. சோதனை செய்யும் இடத்திலிருந்து 5 மீட்டர் தொலைவில் அந்த ரீடர் பொருத்தப்படுகிறது.

மற்ற செய்திகள்