Valimai BNS

ஒரு நாடு எங்களுக்கு உதவ முன்வந்திருக்காங்க.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த உக்ரைன் அதிபர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் நாட்டுக்கு ராணுவ உதவிகள் வழங்க முதல் நாடு முன்வந்துள்ளாதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு எங்களுக்கு உதவ முன்வந்திருக்காங்க.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த உக்ரைன் அதிபர்..!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரில் உக்ரைன் நாடு தனித்து விடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் இன்று உருக்கமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஸ்வீடன் அரசு உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தன. அதில் நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளன.

ஆனால் இந்த நாடுகள் நேரடியாக ராணுவ படைகளையோ, உதவிகளையோ அனுப்பவில்லை என கூறப்படுகிறது. நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய நேட்டோவின் பொதுச்செயலாளர், தற்போதைக்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்புவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

First country to help Ukraine over Russia attacks

இந்த சூழலில் உக்ரைனுக்கு ராணுவ சார்ந்த உதவிகளை ஸ்வீடன் அரசு வழங்கியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ உதவியை செய்யும் முதல் நாடு ஸ்வீடன் என்பது குறிப்பிடத்தக்கது.

SWEDEN, RUSSIAUKRAINEWAR

மற்ற செய்திகள்