'தாலிபான்களின் முகம் மாறுகிறதா'?... 'உண்மையில் அவர்கள் பிளான் தான் என்ன'?... காபூல் விமானநிலையத்தில் நடந்த எதிர்பாராத சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்தவரை காபூல் விமான நிலையம் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேற ஆரம்பித்த நேரத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வந்தனர். உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் எவரும் நாட்டைவிட்டுச் செல்லலாம் என்று தாலிபான்கள் அனுமதி அளித்திருந்தனர்.
அதேநேரத்தில் அப்பாவி ஆப்கான் மக்கள் பலருக்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில், அவர்கள் ஆப்கானிஸ்தானிலேயே சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து கத்தார்க்குருக்கு முதல் சர்வதேச விமானம் கிளம்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் அமெரிக்கர்கள் உள்பட 200 பேர் பயணம் செய்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் காபூல் விமான நிலையம் வந்த பின்னர், தற்போது கத்தார் அரசின் உதவியுடன் விமானங்களை இயக்கும் பணிகளைத் தாலிபான்கள் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. காபூலிலிருந்து கத்தாருக்கு முதல் சர்வதேச விமானம் கிளம்பிய நிலையில், எதிர்வரும் நாட்களில் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களைச் சர்வதேச நாடுகள் மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாலிபான்கள் சர்வதேச விமானச் சேவையைத் தொடங்கியிருப்பது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அவர்கள் திட்டம் தான் என்ன என்பது குறித்து பெரும் விவாதம் கிளம்பியுள்ளது.
மற்ற செய்திகள்