'அதிசய' நெருப்பு அருவி... ஆர்ப்பரித்துக் கொட்டும் ஆச்சர்யம்... இணையதளத்தை கலக்கும் வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில், மலையிலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும்  நெருப்பு அருவியின் வீடியோ சமூகவலைத்தளங்களில வைரலாக பரவி வருகிறது.

'அதிசய' நெருப்பு அருவி... ஆர்ப்பரித்துக் கொட்டும் ஆச்சர்யம்... இணையதளத்தை கலக்கும் வைரல் வீடியோ...!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள யோஸ்மேட் தேசிய பூங்காவில் உள்ள ஒரு மலையிலிருந்து நெருப்பு அருவியாகக் கொட்டும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் ஃபான்டசி திரைப்படங்களில் வரும் காட்சி போல நெருப்பு ஒரு பெரிய மலையிலிருந்து தண்ணீர் கொட்டும் அருவி போலக் கொட்டுகிறது. இந்த வீடியோ பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது. இந்த வீடியோ சுமார் 4.3 மில்லியன் பார்வைகளை தற்போது பெற்றுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் அந்த பகுதியில் நடக்கும் ஒரு இயற்கையான நிகழ்வு தான் என கூறப்படுகிறது.

 

FIREFALLING