பூமிக்கு கீழே பிரம்மாண்ட Underground சிட்டி.. ஒரே நேரத்துல 9 லட்சம் பேர் தங்கலாம்.. ரகசிய கணக்கு போட்ட நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தங்கும் அறைகள், விளையாட்டு மைதானங்கள், ஆலோசனை கூடங்கள் என பூமிக்கு கீழே பிரம்மாண்ட நகரத்தையே உருவாக்கி வைத்துள்ளது பின்லாந்து நாடு.

பூமிக்கு கீழே பிரம்மாண்ட Underground சிட்டி.. ஒரே நேரத்துல 9 லட்சம் பேர் தங்கலாம்.. ரகசிய கணக்கு போட்ட நாடு..!

Also Read | தங்கத்தை தகரம்னு நெனச்சிட்டு இருந்திருக்காரு.. செல்லாதுன்னு நெனச்சவரை கோடீஸ்வராக்கிய ஒரே ஒரு கரன்சி நோட்..!

பின்லாந்து

வடக்கு ஐரோப்பாவின் மூலையில் அமைந்துள்ளது பின்லாந்து. குட்டி நாடு. இங்கே 55 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இதன் தலைநகரம் ஹெல்சிங்கி. ஐரோப்பாவில் வளமான நாடுகளுள் ஒன்றான பின்லாந்து பல ஆண்டுகளுக்கு முன்னரே பூமிக்கு அடியில் ரகசிய நகரத்தை உருவாக்கும் திட்டத்தை கையில் எடுத்தது. நினைத்ததை போலவே, தங்கும் அறைகள், பிரம்மாண்ட விளையாட்டு கூடங்கள், மாநாட்டு அரங்குகள் என அனைத்தையும் கட்டி முடித்திருக்கிறது இந்த நாடு.

Finland Built An incredible hidden city built underground

தலைநகர் ஹெல்சிங்கியின் அடியில் உருவாக்கப்பட்டுள்ள 500 பாதுகாப்பபு ஷெல்டர்களில் ஒரே நேரத்தில் 9 லட்சம் பேர் தங்கலாம். இது ஹெல்சிங்கியின் மொத்த மக்கள் தொகையை விட மூன்றில் ஒரு பங்கு அதிகம்.

எதற்காக இப்படி ஒரு ஏற்பாடு?

அணு ஆயுதங்கள் மற்றும் அணு மின் நிலையங்கள் வெடிப்பின்போது மக்களை காப்பாற்ற உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தன. குறிப்பாக உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள செர்னோபில் அணு உலை வெடித்த சம்பவம் ஐரோப்பா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையில் தான் இப்படி ஒரு முடிவை பின்லாந்து நாடு எடுத்ததாக தெரிகிறது. அணு ஆயுத பேரழிவின் போதும் இந்த இடம் சேதமடையாதபடி இந்த ரகசிய நகரம் கட்டப்பட்டுள்ளது.

Finland Built An incredible hidden city built underground

இவை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்த ரகசிய பதுங்கு அறைகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

போர்

நேட்டோ அமைப்புடன் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யா இதனை கடுமையாக எதிர்த்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். சுமார் 3 மாதங்களாக உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்றுவரும் வேளையில் பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் நேட்டோவுடன் இணைய இருப்பதாக அறிவித்துள்ளன. இதனை ரஷ்யாவும் எதிர்த்து வருகிறது.

Finland Built An incredible hidden city built underground

இந்நிலையில், பின்லாந்தில் உள்ள ரகசிய பாதாள அறைகள் குறித்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் வைரலாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

FINLAND, HIDDEN CITY, பின்லாந்து

மற்ற செய்திகள்