கொரோனா எங்கிருந்து பரவியது?.. அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குனர் சொன்ன பரபரப்பு தகவல்கள்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது? என்பது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI-ன் இயக்குனர் கிறிஸ்டோபர் வ்ரே சொல்லியிருக்கும் தகவல்கள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா எங்கிருந்து பரவியது?.. அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குனர் சொன்ன பரபரப்பு தகவல்கள்.!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஜெயிலில் இருந்து தப்பித்த மாஃபியா தலைவன்.. பெட்ஷீட்டை வச்சு போட்ட பலே ப்ளான்.. .. உலக அளவில் வைரலாகும் வீடியோ..!

கொரோனா 2020 ஆம் ஆண்டு உலகையே ஸ்தம்பிக்க செய்தது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாக சொல்லப்படும் இந்த வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகினர். இருப்பினும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்த பின்னர், உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. அதேவேளையில் உலகளவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாக வேலை இழப்புகள், போக்குவரத்துக்கு தடை என உலகின் பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தன.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது? என்பது குறித்து உலக அளவில் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இதனிடையே, வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் தான் எழுதிய ‘‘வூஹானைப் பற்றிய உண்மைகள்”எனும் புத்தகத்தை எழுதி இருந்தார். அதில், ”கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதுதான். அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது” என அவர் குறிப்பிட்டிருந்தது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI -ன் இயக்குனர் கிறிஸ்டோபர் வ்ரே சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்,"கொரோனா வைரஸின் தோற்றம் சீனாவுக்கு சொந்தமான வூஹான் ஆய்வகத்தில் இருந்து தான் பரவியுள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இதற்கே வாய்ப்புகள் அதிகம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

விலங்குகளில் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில் FBI இயக்குனர் கிறிஸ்டோபர் வ்ரே இவ்வாறு தெரிவித்திருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "நிலநடுக்கம் மாதிரி இருந்துச்சு".. நேருக்கு நேர் மோதிய ரயில்கள்.. 36 பேர் மரணம்.. பெரும் சோகம்..

FBI DIRECTOR, COVID19 VIRUS, CHINESE LAB

மற்ற செய்திகள்