குடும்பத்தோட 'இங்க' வாங்க... இல்லன்னா அங்கயே 'தற்கொலை' பண்ணிக்கங்க... 'நரி வேட்டை'யை கையில் எடுத்த சீனா!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி மக்களை வறுமையில் ஆழ்த்தி வருகிறது. இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி பல்வேறு வழிகளில் உலக நாடுகளுக்கு இடையூறு விளைவிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்தியா எல்லைப்பகுதியை சொந்தம் கொண்டாடி நமது ராணுவ வீரர்கள் 20 பேரின் மரணத்துக்கு காரணமான சீனா தற்போதும் அமெரிக்காவிலும் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது.

ஏனெனில் கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இரண்டு நாடுகளும் தொடர்ந்து முட்டி,மோதி வருகின்றன. தற்போது சீனா 'நரி வேட்டை' என்னும் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டபர் ரே குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதாவது வெளிநாடுகளில் வசித்துவரும் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் சீனர்கள், விமர்சகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் தொடர்ந்து சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டுவது தலைவலியை ஏற்படுத்தும் என ஜின்பிங் தலைமையிலான அரசு கருதுகிறதாம்.
இதற்காக நரி வேட்டை என்னும் பெயரில் அவர்களை வலுக்கட்டாயமாக சீனாவுக்கு வரவழைக்கும் முயற்சியில் சீன அரசு இறங்கி இருக்கிறதாம். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காதவர்கள் இருக்கும் இடத்திற்கு சீன அரசின் பிரதிநிதி ஒருவர் அனுப்பி வைக்கப்படுவார். அவர் அவர்களிடம் இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். ஒன்று அனைவரும் சீனா திரும்புங்கள், இரண்டாவது கூட்டாக இங்கேயே தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்பது தான் அது.
மேலே சொன்ன தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ள ரே இதுபோல அமெரிக்காவில் வசிக்கும் சீனர்களிடம் யாராவது அணுகினால் எஃப்.பி.ஐ அமைப்புக்கு உடனடியாக தகவல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார். பொருளாதார உளவு நடவடிக்கை, தகவல் திருட்டு, அரசியல் தொடர்பான அத்துமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சீனா முக்கிய நாடுகளில் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட ரே,அமெரிக்காவில் ஒவ்வொரு 10 மணி நேரத்திலும் சீனா தொடர்பான ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS