‘அது வெடிகுண்டு சத்தம் இல்லம்மா, வெறும் பொம்மை துப்பாக்கி தான்...’ ‘குழந்தைக்கு கதை சொல்லும் அப்பா ...’ போரின் கொடூரத்தை மழலை சிரிப்பால் வெல்லும் மகள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிரியாவில் போர் நடக்கும் சூழலில் தன் குழந்தைக்கு வெடிகுண்டு சத்தத்தை பொம்மை துப்பாக்கி சத்தமாக கற்பனை செய்து சிரிக்க வைக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி அனைவரது மனதையும் கவலை கொள்ள செய்துள்ளது.

‘அது வெடிகுண்டு சத்தம் இல்லம்மா, வெறும் பொம்மை துப்பாக்கி தான்...’ ‘குழந்தைக்கு கதை சொல்லும் அப்பா ...’ போரின் கொடூரத்தை மழலை சிரிப்பால் வெல்லும் மகள்...!

சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னமும் தணியாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் #savesyria என்ற ஹாஷ்டக்கை மக்கள் சமூகவலைத்தளங்களில் எழுதி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உள்நாட்டு கலவரங்களாக தொடங்கியது தற்போது இரு நாடுகளுக்கிடையே போர் வரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள் தங்கள் வசம் கைப்பற்றி வருகின்றனர்.

இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் உள்ள துருக்கி-சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எஞ்சிய பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகளின் ஆதரவுடன் சிரிய ராணுவம் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் நடக்கும் பகுதிகளில் வசித்த மக்கள் போரின் உக்கிரம் தாங்காமல்  அங்கிருந்து தப்பித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு நடைபெறும் போரில் அதிகமாக இறப்பது அப்பாவி பொதுமக்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின்ஒரு பகுதியான சாராகுஃப்பிலும் போர் காரணமாக அங்கிருக்கும் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அப்படி வெளியேறிய முகமத் குடும்பம் சர்மதா பகுதியில் இருக்கும் தன் நண்பரின் வீட்டில் தற்போது வசித்துவருகின்றனர். அப்பகுதி இருக்கும் சுற்றுவட்டாரத்திலும் அடிக்கடி குண்டு போடப்படுவது வழக்கம். இந்த வெடிகுண்டு சத்தங்களால் தன் குழந்தை செல்வா மனரீதியாகப் பாதிக்கப்படுவதை முகமத் உணர்ந்து அதற்கு ஒரு வழியையும் செயல்படுத்திவருகிறார்.

வெடிகுண்டு போடும் போதெல்லாம் முகமத் தன் குழந்தையிடம் ஒரு கதை சொல்லி அதில் வருபவர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த சத்தம் விளையாட்டுத் துப்பாக்கியிலிருந்து வரும் சத்தம் என்று கூறி தன் மகளை மகிழ்விக்கிறார். பிரிவினை பற்றியும், போரின் உக்கிரத்தை பற்றியும், மனித உயிர்கள் பற்றியும் ஏதும் அறியாத அந்த குழந்தை வெடிகுண்டு சத்தம் கேட்கும் போதெல்லாம் சிரித்து மகிழ்கிறது.

அப்பாவும், மகளும் விளையாடும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி குழந்தைக்கு மகிழ்ச்சியையும், அதை பார்ப்பவர்களுக்கு வேதனையையும் தருவதாக உள்ளது.

CHILDLAUGH