"நானும் இப்ப அம்மா தான்".. பெத்த புள்ளைங்களை மனைவிகிட்ட இருந்து மீட்க.. சட்டப்பூர்வமாக பெண்ணாக மாறிய தந்தை..! உருக்கமான பின்னணி.!!
முகப்பு > செய்திகள் > உலகம்கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உருவான நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் ஒன்று, உலக அளவில் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | "கர்ப்பம் இல்ல".. ஆனாலும் பிரசவ வலியை அனுபவித்த இளம்பெண்.. திகைக்க வைத்த காரணம்!!
தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியை சேர்ந்தவர் ரெனே சாலினாஸ் ராமோஸ். இவருக்கு தற்போது 47 வயதாகும் நிலையில், இரண்டு மகள்களும் இவருக்கு உள்ளனர்.
இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக ராமோஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த நாட்டு சட்டப்படி பெண் குழந்தைகள் தாயிடம் தான் இருக்க வேண்டும் என தகவல்கள் கூறுகின்றது. இதனால், ராமோஸின் இரண்டு மகள்களும் அவரது மனைவியின் கவனிப்பில் இருந்து வருகின்றனர். ஆனால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தனது மகள்களை சில இன்னல்களுக்கு ஆளாக்குவதாகவும் கேள்விபட்டுள்ளார் ராமோஸ். அது மட்டுமில்லாமல், கடந்த ஐந்து மாதங்களாக மகள்களை பார்க்க முடியாமல் கூட அவர் தடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதன் காரணமாக தனது மகள்களை தன்னுடனே அழைத்துக் கொண்டு வந்து விட வேண்டும் என விரும்பியுள்ளார் ராமோஸ்.
ஆனால் சட்டப்படி அதற்கு அவர் முயற்சித்த போது தந்தை என்பதால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி இருக்கவே இந்த பிரச்சனைக்கு வித்தியாசமாக ஒரு தீர்வை காண முடிவு செய்துள்ளார் ராமோஸ். அதாவது தன்னுடைய மகள்களுக்காக தன் பாலினத்தை சட்டப் பூர்வமாகவும் அவர் மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. உடல் ரீதியாக இல்லாமல், சட்ட ரீதியாகவும் அவர் அப்படி மாறி உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தனது அடையாள அட்டையிலும் தனது பாலினத்தை ஃபெமேனினோ (Femenino) என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
இது பற்றி பேசும் ராமோஸ், "இப்போது நானும் ஒரு பெண் தான். எனவே என் குழந்தைகளுக்கு நல்ல ஒரு அம்மாவாக இருக்க முடியும்" என கூறி மனைவியிடம் இருந்து குழந்தைகளை மீட்டு தர வேண்டும் என நீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளார். அத்துடன் தான் பெண்ணாக மாற்றியதற்கான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், மகள்களுக்காக தந்தை செய்த சம்பவம் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, ராமோஸ் எடுத்த முடிவு, அந்நாட்டில் உள்ள டிரான்ஸ் ஆர்வலர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது முடிவின் காரணமாக, சட்டசபையில் இருந்து தங்களுக்கு எதிராக சட்டம் இயற்றி விடுவார்கள் என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால், அதே வேளையில் ராமோஸ் எடுத்த முடிவு, அவர்களை ஆச்சர்யப்படுத்தவும் செய்துள்ளது.
Also Read | நைட்டியில் வந்த திருடர்.. வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால்.. ஆத்திரத்தில் செஞ்ச அதிர்ச்சி காரியம்!!
மற்ற செய்திகள்