ஒரு டாடி பண்ற காரியமா இது..? சாப்டுட்டு மகனை பில் கொடுக்க சொன்ன தந்தை.. பையன் கொடுத்த ஸ்மார்ட் பதில்.. கியூட் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்உணவகம் ஒன்றில் தனது மகனை சாப்பாட்டுக்கான தொகையை கொடுக்கும்படி தந்தை சொல்ல, அதற்கு சிறுவன் அளித்த கியூட் பதில் பலரையும் புன்னகைக்க வைத்திருக்கிறது. இதனிடையே இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இணைய வசதி பெருகிவிட்டதன் பலனாக சமூக வலை தளங்களின் பயன்பாடும் மக்களிடையே கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதனிடையே அன்றாட வாழ்வில் நடைபெறும் சுவராஸ்ய சம்பவங்களை மக்கள் சமூக வலை தளங்களில் பதிவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் சில சமயங்களில் வைரலாகிவிடுவது உண்டு. அந்த வகையில் ட்ரேக் என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பல மில்லியன் மக்களால் ரசிக்கப்பட்டிருக்கிறது.
உணவகம்
டிரேக் பகிர்ந்துள்ள வீடியோவில் தனது மகனுடன் உணவகத்திற்கு சென்றிருக்கிறார் ஒரு தந்தை . அப்போது, உணவு உண்ட பின்னர் பில் வந்திருக்கிறது. அதனை எதிர் புறத்தில் அமர்ந்திருக்கும் தனது மகனிடம் நீட்டுகிறார் டிரேக். மேலும், உண்வுக்கான பில் தொகையை செலுத்தும்படி தனது மகனிடம் கூறுகிறார் அவர். சிப்ஸை சுவைத்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் அதை கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்துப்போகிறான்.
அதன்பின்னர் கூலாக, அந்த பில்லை வாங்கிக்கொள்கிறான். அதனை கண்ட தந்தை "உன்னிடம் பணம் இருக்கிறா?" எனக் கேட்கிறார். அப்போதும் அந்த சிறுவன் அமைதியாகவே இருக்கிறான். மீண்டும் ஒருமுறை உணவுக்கான பில் தொகையை கொடுக்கும்படி மகனிடம் சொல்கிறார் அந்த தந்தை.
பதில்
என்ன சொல்வதென்று தெரியாமல் அமைந்திருந்த சிறுவன் நிதானமாக,"உணவுக்கான பில் தொகையை நீங்களே கொடுத்துவிடுங்கள். நாம் வீடு திரும்பிய பின்னர் நான் உங்களுக்கு பணம் கொடுத்துவிடுகிறேன்" எனச் சொல்கிறான். அப்போது வெடித்துச் சிரிக்கும் அந்த தந்தை விளையாட்டுக்காக இப்படி செய்ததாகவும் ஆனால், சிறுவனுடைய பதில் தன்னை ஈர்த்ததாகவும் கூறுகிறார். இதனை அவர் வீடியோவாக எடுத்து வெளியிட அது தற்போது வைரலாகி விட்டது.
இந்த வீடியோவை இதுவரையில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்திருக்கின்றனர். மேலும், கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள் இந்த வீடியோவை லைக் செய்திருக்கின்றனர். இதனிடையே சிறுவனின் பதில் குறித்து பலரும் கமெண்ட் செய்துவருகின்றனர்.
Also Read | "தூங்குனா போதும்.. சம்பளம் தர்றோம்".. திகைக்க வச்ச நிறுவனத்தின் Job ஆஃபர்.. படையெடுக்கும் நெட்டிசன்கள்..!
மற்ற செய்திகள்