உலகின் அதிவேக வெர்டிகல் ரோலர் கோஸ்டர்.. கின்னஸ் சாதனை படைத்த துபாய்.. அசர வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் அதிவேக வெர்டிகல் லாஞ்ச் (vertical-launch) ரோலர் கோஸ்டராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது துபாயில் உள்ள ஸ்டார்ம் கோஸ்டர் (Storm Coaster). இந்நிலையில், இந்த ரோலர் கோஸ்டரின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | ட்விட்டரை கைப்பற்றினாரா எலான் மஸ்க்..? முதல் வேலையா இந்தியரான ட்விட்டர் CEO நீக்கமா.? பரபரப்பு தகவல்கள்..!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நிறுவப்பட்டுள்ளது இந்த ஸ்டார்ம் கோஸ்டர். எமார் குழுமத்தின் துபாய் ஹில்ஸ் மாலில் இயங்கி வரும் இந்த ரோலர் கோஸ்டர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கட்டிடத்திற்கு உள்ளே மணிக்கு 41 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரோலர் கோஸ்டர் உலகின் அதிவேக வெர்டிகல் லாஞ்ச் (vertical-launch) ரோலர் கோஸ்டர் என கின்னஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இதற்கான சான்றிதழையும் அந்த அமைப்பு வழங்கி இருக்கிறது.
இந்த ரோலர் கோஸ்டர் பயணிப்பதற்காக 670 மீட்டர் டிராக்கும் மாலின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது. துபாய் ஹில்ஸ் மாலில் இந்த ரோலர் கோஸ்டர் முதன் முதலில் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்நிலையில் துபாய் ஹில்ஸ் மால் தங்களது ஸ்டார்ம் ரோலர் கோஸ்டர் உலகின் அதிவேக வெர்டிகல் லாஞ்ச் (vertical-launch) ரோலர் கோஸ்டராக கின்னஸ் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக உலகின் மிக உயரமான கட்டிடமாக புர்ஜ் கலீஃபாவில் வண்ணமிகு கண்காட்சி நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து பேசிய எமார் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்,"நாங்கள் தி ஸ்டார்ம் கோஸ்டரைத் திறந்தபோது, இதுவரை கண்டிராத ஒரு நம்பமுடியாத அனுபவத்துடன் மக்களின் கவனத்தை ஈர்க்க விரும்பினோம். கின்னஸ் உலக சாதனையைப் பெறுவது அதற்கு மிகப்பெரிய அங்கீகாரம். உண்மையிலேயே இது தனித்துவமானது. துபாயின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரோலர் கோஸ்டர் பெரும் மக்களை ஈர்த்து வருகிறது" என்றார்.
இந்நிலையில், துபாய் ஹில்ஸ் மால் தங்களுடைய ஸ்டார்ம் ரோலர் கோஸ்டரின் வீடியோவையும் சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | 37 வயது இடைவெளி.. வயதான பெண்ணுக்கு இளைஞருடன் மலர்ந்த காதல்.. "சீக்கிரமா கல்யாணமும் பண்ணிக்க போறாங்களாம்"..
மற்ற செய்திகள்