'தனது கார் டிரைவரை திருமணம் செய்த கோடீஸ்வர இளம்பெண்?'... 'சொத்து மட்டும் இவ்வளவு கோடியா'?... 'ஷாக்கான நெட்டிசன்கள் கோரஸாக எழுப்பிய ஒரே கேள்வி!
முகப்பு > செய்திகள் > உலகம்பல பில்லியன் சொத்துக்குச் சொந்தக்காரரான இளம்பெண் ஒருவர் தனது கார் ஓட்டுநரைத் திருமணம் செய்துகொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வர பெண் 'Sahoo bint Abdullah Al-Mahboob' தனது ரேஞ் ரோவர் காரின் ஓட்டுநரான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் மணப்பெண்ணான Sahooவின் சொத்து மதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகிறது. அவருக்கு மெக்கா, மதீனா போன்ற இடங்களில் பல கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோன்று பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த வீடியோ வைரலானதையடுத்து, பிபிசி செய்தி நிறுவனம் அதன் உண்மை தனிமையை அறிந்து கொள்ள முயற்சி செய்தது. ஆனால் அந்த வீடியோ பின்னால் இருக்கும் முழு உண்மைத் தன்மையை அந்நிறுவனத்தால் அறிந்து கொள்ள முடியவில்லை. கடந்த டிசம்பர் 24ம் தேதியும் இதே வீடியோ ட்விட்டரில் வைரலானது.
அந்த வீடியோவில் அந்த பெண்ணின் பெயர் Yasmeen bint Mashal al-Sadri என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த வீடியோவில் அந்த இளம்பெண் கோடீஸ்வரர் என எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. இதுதொடர்பாக எந்த தகவல்களும் சர்வதேச ஊடகங்களால் உறுதி செய்யப்படாத நிலையில், சவூதி அரேபியாவின் உள்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் இதுதொடர்பாக எந்த செய்தியையும் வெளியிடவில்லை.
அதே நேரத்தில் இந்த செய்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது. சவுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேறு நாட்டை சேர்ந்த நபரைத் திருமணம் செய்து கொள்வது என்பது அவ்வளவு எளிது அல்ல. அதற்குப் பல சட்டச் சிக்கல்கள் உள்ளது. சவூதி சட்டத்தின் படி, சவூதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேறு நாட்டை சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், அந்த பெண் 25 வயதை அடைந்து இருக்க வேண்டும்.
அதன்பிறகு திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஆணுக்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நடைமுறைகள் முடியவே பல மாதங்கள் ஆகும் என்பதால் இந்த செய்தி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்கிடையே சவூதி கோடீஸ்வர இளம்பெண் தனது கார் ஓட்டுநரைத் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வைரலானதும், நெட்டிசன்கள் பலரும் ஷாக் ஆனார்கள்.
அதில் பல நெட்டிசன்கள் கேட்ட ஒரே கேள்வி, ''சவூதி அரேபியாவிற்கு கார் ஓட்டுநராகச் செல்ல என்ன நடைமுறை'' என்பதே ஆகும். மேலும் நாங்கள் உடனே சவூதிக்கு விசாவிற்காக விண்ணப்பிக்கலாம் என இருக்கிறோம் என நகைச்சுவையாகவும் பதிவிட்டுள்ளார்கள்.
Sahoo Bint Abdullah Al-Mahboub, Businesswoman whose wealth is estimated at 8 billion$. She owns residential properties and hotels a lot in Mecca and Medina, as well as towers in France and others. She marries her Pakistani driver. pic.twitter.com/tQ9PFzHXN3
— Imran (@hassanjutt25) January 1, 2021
Damn !!
I should become taxi driver !
— Usman Nasir (@usmanjn13) January 2, 2021
All Pakistani Engineers (Berozgaar) should apply Saudi visa.
— ہانی۔🥀 (@ZeyadaFreeNaHo) January 1, 2021
மற்ற செய்திகள்