"அங்க தொட்டு... இங்க தொட்டு... கடைசில...!" 'மார்க் ஜுக்கர்பெர்க்' மடியிலேயே கை வெச்சுட்டிங்களே... "அடேய் ஹேக்கர்ஸ் உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா..."
முகப்பு > செய்திகள் > உலகம்ஃபேஸ்புக்கின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 'Our Mine' என்ற பெயரில் வந்த ஹேக்கர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஹேக் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரும் சமூகவலைதள நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. அவர்களுக்கென்று அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கமும் உள்ளது.
கடந்த வெள்ளியன்று 'Our Mine' என்ற பெயரில் வந்த ஹேக்கர்கள், ஃபேஸ்புக்கின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஹேக் செய்தனர். ஹேக்கர்களால் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அவற்றையும் மீறி ஹேக்கர்கள் இந்த பக்கங்களை ஹேக் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைப் பற்றி, "பேஸ்புக்கையும் கூட யாராலும் ஹேக் செய்ய முடியும். என்ன, ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு ட்விட்டரைவிட கொஞ்சம் மேம்பட்டதாக இருக்கிறது" எனத் தங்கள் அதிகாரபூர்வ பக்கத்திலிருந்து பதிவிட்டுள்ளனர் ஹேக்கர்கள்.
ட்விட்டரில் ஃபேஸ்புக்கின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அந்நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. அதே போல் ஃபேஸ்புக் நிறுவனமும் தங்கள் தளங்களில் தங்களது அதிகாரபூர்வ பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அந்தக் கணக்குகளை விரைவிலேயே மீண்டும் கைப்பற்றிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
'Our Mine' என்ற இந்த ஹேக்கர்கள்தான் இதற்கு முன் பல ESPN, NFL முதலிய பிரபலமான தளங்கள் மற்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ட்விட்டரின் துணை நிறுவனர் ஜாக் டோர்ஸி ஆகியோரது சமூக வலைதள கணக்குகளையும் ஹேக் செய்துள்ளனர்.
ஆனால், மற்ற ஹேக்கர்களைப்போல் எந்த விதமான தகவல் திருட்டிலும் இவர்கள் ஈடுபடுவது இல்லை. அதற்கு மாறாக இது போன்ற நிறுவனங்களின் தளங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அந்த ஹேக்கர்கள் குழு தெரிவித்துள்ளது.