''ஃபேஸ்புக்'ல இத நீங்க பண்ணீங்களா இல்லயா?'.. 'அது வந்து'... சரமாரி கேள்விகளால்... நேரலையில் திணறிய 'மார்க்'..! 'கடைசில எல்லா உண்மையும் போட்டு ஒடைச்சிட்டாரு'!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மற்ற நிறுவனங்கள் எங்களின் சிறப்பம்சங்களை காப்பி செய்து செயல்படுத்துவதைப் போலவே, நாங்களும் மற்றவர்களின் சிறப்பம்களை காப்பி செய்திருக்கிறோம் என Antitrust விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க்.

''ஃபேஸ்புக்'ல இத நீங்க பண்ணீங்களா இல்லயா?'.. 'அது வந்து'... சரமாரி கேள்விகளால்... நேரலையில் திணறிய 'மார்க்'..! 'கடைசில எல்லா உண்மையும் போட்டு ஒடைச்சிட்டாரு'!!

நேற்று பிற்பகல் House Antitrust துணைக்குழு விசாரணையில், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் தனது நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் செயலிகள் மற்றும் அதன் அம்சங்களை காப்பி செய்வது தொடர்பான உத்தி குறித்து நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் பேரம், பேசுவதைப் போன்ற சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளதா என்பதைக் குறித்த கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

போட்டி நிறுவனமாக செயல்படும்போது, அவர்களின் தயாரிப்பு அம்சங்களைப் போல வடிவமைத்திருக்கிறோம். ஆனால், போட்டியிடுவதற்கு பதிலாக, நிறுவனத்தை தங்களுக்கு விற்குமாறு யாரையும் வற்புறுத்தியதில்லை, அச்சுறுத்தியதில்லை என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் தெரிவித்துள்ளார்.

நீங்கள் மற்ற நிறுவனங்களை காப்பி அடித்தீர்களா? என்று இந்திய அமெரிக்கரான கீழவை உறுப்பினர் பிரமிளா ஜெயபாலின் நேரடியான கேள்விக்கு, ஆம் என பதிலளித்த மார்க், மற்ற நிறுவனங்களும் அதைச் செய்துள்ளதாகக் கூறியிருக்கிறார். "நான் மற்ற நிறுவனங்களைக் குறித்து கேட்கவில்லை, ஃபேஸ்புக் காப்பி செய்திருக்கிறதா என்பதைக் கேட்டேன்" என்றார்.

விசாரணையை முடிக்கும்போது, இதுகுறித்த நிலைப்பாட்டைத் தெரிவித்த பிரமிளா ஜெயபால், "ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிறுவனம், மற்ற போட்டி நிறுவனங்களை பயமுறுத்தினால், அது சரியான வியாபார நடைமுறையாக இருக்காது. எங்களுடைய தகவல்களை எடுத்து, அதை பணமாக்குகிறீர்கள். பின்பு, போட்டி நிறுவனங்களின் தகவல்களையும் எடுத்து, அதில் இருக்கும் சிறப்பம்சங்களை காப்பி செய்கிறீர்கள். அது சரியான உத்தி இல்லையே" என்று தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்