3 வயதில் தொலைந்த மகனை.. ‘ஃபேஸ் ஆப் தொழில்நுட்பத்தால்’ கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் ஒரு பெற்றோர் 3 வயதில் தொலைந்த மகனை ஃபேஸ் ஆப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துள்ளனர்.

3 வயதில் தொலைந்த மகனை.. ‘ஃபேஸ் ஆப் தொழில்நுட்பத்தால்’ கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்..

ஃபேஸ் ஆப் என்பது பயனாளரின் தற்போதைய புகைப்படத்தைக் கொடுத்து, அவர் வயதானால் எப்படி இருப்பார்? சிறுவயதில் எப்படி இருந்தார்? பெண்ணாக இருந்தால் எப்படி இருப்பார்? எனத் தெரிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம் ஆகும். மிகவும் பிரபலமாக உள்ள இந்த ஆப் தற்போது தனிநபர்களின் புகைப்படங்களை சேமித்து வைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறது.

இந்நிலையில் சீனாவில் தொலைந்துபோன மகனை பெற்றோர் 18 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்க இந்த ஆப் உதவியுள்ளது. குவாங்டாங் மாகாணம் ஷென்லேன் நகரைச் சேர்ந்த லீ என்பவரின் மகனான யு வீபெங் 2001ஆம் ஆண்டு 3 வயதாக இருக்கும்போது காணாமல் போயுள்ளார். எவ்வளவு தேடியும் மகன் கிடைக்காததால் சோகத்தில் இருந்த பெற்றோர் தற்போது ட்ரெண்டாகியுள்ள ஃபேஸ் ஆப் மூலம் அவரைத் தேட முயற்சித்துள்ளனர்.

ஃபேஸ் ஆப்பில் மகனின் சிறுவயது புகைப்படத்தைக் கொடுத்து அவர்கள் அதைத் தற்போதைய வயதுக்கு ஏற்றபடி மாற்றியுள்ளனர். பின்னர் அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு போலீஸார் உதவியுடன் மகனைத் தேடியுள்ளனர். இறுதியில் அவர்களது தேடலுக்குப் பலனாக கவுங்சோ மாகாணத்தில் படித்து வரும் ஒரு மாணவரின் முகத்துடன் அந்தப் புகைப்படம் ஒத்துப்போயுள்ளது. பின்னர் அவருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்து பார்த்தபோது அவர்தான் யு வீபெங் என்பதும் உறுதியாகியுள்ளது. காணாமல் போன அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என அனைவரும் நினைத்திருந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீபெங்கை எடுத்து வளர்த்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

FACEAPP, CHINA, MISSINGCHILD, REUNITED, FAMILY