இவ்வளவு நாளா இப்படி ஒன்ன தான் தேடிட்டு இருந்தாங்க.. வெளிச்சத்துக்கு வந்த மில்லியன் வருஷ மர்மம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பூமியில் விழுந்த விண்கல்லில் வேற்று கிரகம் ஒன்றை சேர்ந்த தண்ணீர் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது அறிவியல் உலகில் புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்திருக்கிறது.

இவ்வளவு நாளா இப்படி ஒன்ன தான் தேடிட்டு இருந்தாங்க.. வெளிச்சத்துக்கு வந்த மில்லியன் வருஷ மர்மம்..!

விண்வெளி எப்போதும் பல விடைகாணமுடியாத கேள்விகளை கொண்டிருக்கிறது. மனிதகுல வாழ்க்கையின் ஆரம்ப பக்கங்களில் விசித்திரமாக இருந்த பல மர்மங்களை அறிவியலின் துணையோடு நிபுணர்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள். அந்த வகையில் விண்வெளி குறித்த பல புதிர்களில் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ சாத்தியமான சூழ்நிலை இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியில் அப்போது சுவாரஸ்ய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

Extraterrestrial water found for first time in meteorite

விண்கல்

இங்கிலாந்தில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வேற்றுகிரக பொருட்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருபவர் டாக்டர். ஆஷ்லே கிங். இவர் கடந்த பிப்ரவரி மாதம் குளோசெஸ்டர்ஷைர் நகரத்தில் சாலையில் கிடந்த வித்தியாசமான பொருளை பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார். பூமியில் விழுந்த விண்கல் தான் அது என்பதை உடனடியாக தெரிந்துகொண்ட கிங், உடனடியாக அதை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது.

தண்ணீர்

சாலையில் கிடந்த அந்த விண்கல்லில் தண்ணீர் இருப்பதை கிங் கண்டறிந்திருக்கிறார். ஆனால், சிக்கல் என்னவென்றால் அது பூமியில் உள்ள தண்ணீரை போல இல்லை என்பதுதான். தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளில் அது வேற்றுகிரகத்தில் இருக்கும் தண்ணீர் என்பது தெரியவந்திருக்கிறது. சூரிய குடும்பத்தில் கார்பன் அதிகம் இருக்கும் கிரகங்களில் இருந்து இது வந்திருக்கலாம் என கூறும் கிங்,"உண்மையில் இது பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இது வால்நட்சத்திரத்தில் இருந்து வந்ததா? அல்லது சிறுகோள் ஏதேனும் ஒன்றில் இருந்து வந்திருக்குமா? என சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. இதில் உள்ள தண்ணீர் பூமியில் உள்ளதை போலவே இருந்தாலும் இது வேற்று கிரகத்தில் இருக்கும் நீர் தான். இந்த கல்லில் 12 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. பூமிக்கு எப்படி தண்ணீர் வந்தது? கடல்கள் எவ்வாறு உருவாகின என்ற மில்லியன் வருட கேள்விகளுக்கு இந்த ஆராய்ச்சி பதில் அளிக்கும்" என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Extraterrestrial water found for first time in meteorite

டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இதுகுறித்து பேசிய கிங் இந்த விண்கல் வியாழன் கோளுக்கு அருகில் அமைந்திருக்கும் சிறுகோள் ஒன்றிலிருந்து வந்திருக்கலாம் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் விண்வெளி ஆய்வில் புதிய பக்கங்களை எழுத காரணமாக அமையும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் கூற்றாக இருக்கிறது.

SPACE, WATER, RESEARCH, வேற்று கிரகம், ஆராய்ச்சி, தண்ணீர்

மற்ற செய்திகள்