Viruman Mobiile Logo top

ஆண்கள் கட்டாயம் 2 பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும்?.. மீண்டும் வைரலான செய்தி.. உண்மை என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணங்களை செய்துகொள்ள வேண்டும் இல்லையென்றால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதனை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

ஆண்கள் கட்டாயம் 2 பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும்?.. மீண்டும் வைரலான செய்தி.. உண்மை என்ன?

Also Read | "சுத்தி 128 பிளாட்'ல இவரு தான் ஒரே ஆளு.." தனியாக வாழும் முதியவர்.. "இப்போ பேய் நகரம் மாதிரி இருக்காம்.."

சமூக வலை தளங்களில் எப்போதுமே வேடிக்கையான மற்றும் வினோதமான விஷயங்களை மக்கள் பெருமளவில் விரும்பி அறிந்துகொள்கின்றனர். அதன் அடிப்படையில் பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிட போட்டிகள் அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமானது தான் என்றாலும் கூட, சில நேரங்களில் இதுபோன்ற வதந்திகள் பரவவும் இதுவே காரணமாக அமைகின்றன.

Eritrea Men should marry two women story is a hoax

திருமணங்கள்

திருமணங்கள் உலகம் முழுவதும் அங்கு வாழும் மக்களின் கலாச்சாரங்களுக்கு ஏற்றபடி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஆப்பிரிக்கா போன்ற பல பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் வசிக்கும் நாடுகளில் பல்வேறு திருமண சடங்குகள் உள்ளன. அப்படி, ஆப்பிரிக்க நாடான எரித்ரியாவில் ஒரு ஆண்கள் கண்டிப்பாக இரண்டு பெண்களை மனம் செய்துகொள்ள வேண்டும் என சட்டம் இருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது அந்நாட்டு அரசு.

வட கிழக்கு ஆப்பிரிக்க தேசம் எரித்ரியா. இங்கு மக்கள் தொகை 40 லட்சமாக உள்ளது. எரித்ரியாவுக்கு மேற்கில் சூடான், தெற்கில் எத்தியோபியா, தென்கிழக்கில் திஜிபோட்டி, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் செங்கடலும் உள்ளன. அண்டை தேசமான எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்து தனி நாடானது எரித்ரியா. இதற்காக கடுமையான உள்நாட்டுப்போர்கள் நடந்தன. இதில் சுமார் ஒன்றரை லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இரண்டு திருமணம்

கடந்த சில நாட்களாக எரித்ரியாவின் திருமண சட்டம் குறித்த செய்திகள் சமூக வலை தளங்களில் வைரலாகின. அதாவது எரித்ரிய ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதனை அந்நாட்டு அரசு மறுத்திருக்கிறது. இதுபற்றி பேசிய எரித்ரியா நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் யேமானே கெப்ரேமஸ்கல், "எங்கள் அரசு கட்டாய பலதார திருமணத்தை சட்டமாக்கி ஊக்குவிப்பதில்லை. இது போன்ற செய்திகள் ஊடகங்களால் வேண்டும் என்றே திரித்து பரப்பப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.

Eritrea Men should marry two women story is a hoax

இப்படி எரித்ரியாவின் திருமண சட்டம் குறித்து தவறான தகவல்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பரப்பப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இதனை அந்நாட்டு அரசும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

Also Read | சேவாக்'க அவுட் ஆக்க ஆஸ்திரேலியா வெச்ச பொறி.. "கடைசி'ல இது தான் நடந்துச்சு.." பிரெட் லீ பகிர்ந்த 'அதிரடி' விஷயம்!!

ERITREA MAN, MARRY, TWO WOMEN, HOAX

மற்ற செய்திகள்