ஆற்றில் கரை ஒதுங்கிய ராட்சச பாம்புத் தோல்.. தெறிச்சு ஓடிய நபர்.. அதுக்கப்பறம் தான் இன்னொரு பயமும் வந்திருக்கு..!
முகப்பு > செய்திகள் > உலகம்புகழ்பெற்ற தேம்ஸ் நதிக்கரையில் ராட்சச பாம்பு தோல் ஒன்று கரை ஒதுங்கியிருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
பாம்பு
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று பழமொழி உண்டு. அந்த வகையில் பாம்பை கண்டு அச்சம் கொள்ளாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பொதுவாக ஒருவரது வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டால் உடனடியாக அக்கம் பக்கத்தில் ஆட்கள் திரண்டு பெரிய களேபரமே நடந்துவிடும். எதிர்பாராத வேளையில் பாம்பை பார்க்க நேரிட்டால் அது ஏற்படுத்தும் அதிர்ச்சி நம்மை விட்டு அகலவே சில மணி நேரங்கள் தேவைப்படும். அப்படி மக்களை கடும் அச்சத்தில் தவிக்கவிடும் பாம்புகள் தங்களது தோலை குறிப்பிட்ட கால இடைவெளியில் உரிக்கும். இதனை சிலர் பாம்பு சட்டை என்றும் கூறிவருகிறார்கள்.
போவா கான்ஸ்டரிக்டர்
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆறு தேம்ஸ். இதன் வடக்கு பகுதியில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி இந்த பாம்பு தோல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆற்றில் மூழ்கிப்போன விலையுயர்ந்த பொருட்களை கண்டுபிடிக்கும் தொழிலை செய்துவரும் ஜேசன் சாண்டி என்பவர் தேம்ஸ் நதியில் இறங்க சென்றிருக்கிறார். அப்போது கரையில் 5 அடி நீளமுள்ள பாம்பு தோலினை அவர் பார்த்து உள்ளார். ஆரம்பத்தில் அது என்ன என்பது தெரியாமல் தவித்த ஜேம்ஸ், அது பாம்புத் தோல் தான் எனத் தெரியவந்தவுடன் திகைத்துப்போயிருக்கிறார்.
இந்த தோல் போவா கான்ஸ்டரிக்டர் (boa constrictor) எனும் பாம்பினுடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர். இந்த வாகை பாம்புகள் மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன. விஷமில்லாத இந்த வகை பாம்புகள் அதிகபட்சமாக 18 அடி வரையில் வளரும் எனவும் சராசரியாக இதன் நீளம் 10 அடியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகம்
தான் கண்ட பாம்பு தோலின் புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜேம்ஸ்,"நான் நீளமான பாம்பு தோலினை கண்டேன். அப்போது என்னுடைய கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. கரையில் அந்த தோல் கிடந்தது. நான் தேம்ஸில் இருக்கிறேனா? அல்லது அமேசான் நதியிலா? என எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஒருவேளை அந்தப்பாம்பு மீண்டும் தன்னுடைய தோலை தேடி வருமோ என்ற அச்சம் காரணமாக நான் அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே இருந்தேன். இது என்ன வகை பாம்புடைய தோல் என்பது குறித்து யாரேனும் விளக்குங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே இந்த பாம்பு தோலின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தங்களில் வைரலாக பரவி வருகிறது
மற்ற செய்திகள்