இளம்பெண்ணை காதலித்து விட்டு... அவரது தந்தையை கரம்பிடித்த காதலன்!.. திருமணத்துக்கு முன்பாகவே மகள் கொடுத்த அன்பு பரிசு!.. தம்பதியினர் கொண்டாட்டம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்இளம்பெண்ணின் முன்னாள் காதலனை, அவருடைய ஓரினச்சேர்க்கையாளரான தந்தை மணமுடிக்க இருப்பதால், அப்பெண் தனது கருமுட்டைகளை வழங்க முன்வந்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 21 வயது நிரம்பிய பெண், சாஃப்ரான். அவருடைய தந்தை பேரி. சாஃப்ரான் பல மாதங்களுக்கு முன்பாக ஸ்காட் என்பரை காதலித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் இருவரும் தங்கள் காதலை முறித்து கொண்டு நண்பர்களாக மட்டும் இருந்துள்ளனர். பின்னர், சாஃப்ரான், அவரது தந்தை பேரி, மற்றும் முன்னாள் காதலன் ஸ்காட் மூவரும் விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றுள்ளனர்.
சாப்ரானின் தந்தையான பேரி, ஓரினச்சேர்க்கையாளர். இந்நிலையில், சாஃப்ரானுடனான காதலை முறித்து கொண்ட ஸ்காட், பேரியை காதலிக்க தொடங்கியுள்ளார். விடுமுறை கொண்டாட்டத்தின் போது, சாஃப்ரானின் தந்தையான பேரியும், சாஃப்ரானின் முன்னாள் காதலரான ஸ்காட்டும் திருமண நிச்சயம் செய்து கொண்டனர்.
இருவருமே ஆண் என்பதால், இயற்கையாக குழந்தை பெற வாய்ப்பில்லை. இதனை உணர்ந்த சாஃப்ரான், தன்னுடைய கருமுட்டைகளை அந்த தம்பதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, தொழில்நுட்ப உதவியுடன் சாஃப்ரான் வெற்றிகரமாக கர்ப்பம் தரித்தார். இந்த நிலையில், கடந்த செம்டம்பர் மாதம் ஓரினச்சேர்க்கை தம்பதியின் முதல் குழந்தையை பெற்று எடுத்துள்ளார் சாஃப்ரான்.
மேலும், இதுகுறித்து சாஃப்ரான் கூறுகையில், "எனது தந்தைக்கும், எனது முன்னாள் காதலனுக்கும் மீண்டும் ஒரு குழந்தை வேண்டும் என்றால் கூட நான் அவர்களுக்கு எனது கருமுட்டையை வழங்க தயாராக இருக்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்