MKS Others

நம்ம 'அக்கவுண்ட்'ல எப்படிடா ரூ. 7.7 கோடி 'கிரெடிட்' ஆச்சு...? '15 மாசம் கழிச்சு தெரிய வந்த உண்மை...' - அதிர்ந்து போன பெண்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ. 7.7 கோடி பணம் டெபாசிட் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம்ம 'அக்கவுண்ட்'ல எப்படிடா ரூ. 7.7 கோடி 'கிரெடிட்' ஆச்சு...? '15 மாசம் கழிச்சு தெரிய வந்த உண்மை...' - அதிர்ந்து போன பெண்...!

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவரின் வங்கிக்கணக்கில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சுமார் 7,74,839 பவுண்டுகள் அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7.7 கோடி தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

england woman mistakenly Rs. 7.7 crore cash credit

என்னடா இது இவ்வளவு பணம் எப்படி தன் அக்கௌன்ட்டிற்கு வந்தது என அதிர்ச்சியடைந்த அந்த பெண் பணத்தை போட்டவர்கள் திரும்பி கேட்டால் பார்த்துக்கொள்ளலாம் என அசால்ட்டாக இருந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது வருவாய் மற்றும் சுங்கத்துறைக்கு செல்ல வேண்டிய பணம் தான் தவறுதலாக அந்த பெண்ணின் கணக்குக்கு சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. சுமார் 15 மாதங்களாக கவனிக்காத அதிகாரிகள் இப்போது தான்  7,74,839 பவுண்டுகள் தங்களது கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

england woman mistakenly Rs. 7.7 crore cash credit

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், வங்கியை அதிகாரிகள் தொடர்புகொண்டு விசாரணை நடத்தியபோது தான் பணம் இந்த பெண்ணின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

உடனடியாக சம்பந்தப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்ட வங்கி அதிகாரிகள், பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். அந்த பெண்ணும் பணத்தை தருவாதகவும், ஆனல் தன் வங்கி கணக்கில் இருந்த 20,000 பவுண்டுகளை (ரூ.19 லட்சம்) செலவழித்து விட்டதாக கூறினார்.

அதோடு, அந்த பணத்தை இப்போது தன்னால் உடனடியாக திருப்பிச் செலுத்த முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும், இவ்வளவு பணம் தவறுதலாக டெபாசிட் ஆகியிருக்க வேண்டும் என்பதை அறிந்து பல மாதங்கள் சம்பந்தப்பட்டவர்கள் தன்னை தொடர்பு கொள்வார்கள் என காத்திருந்ததாகவும் கூறினார்.

அதுமட்டுமில்லாமல், இந்த பணம் டெபாசிட் ஆனப் பின் வருமான வரி தாக்கல் செய்தபோது கூட இவ்வளவு பெரிய தொகை வரவானது குறித்து அதிகாரிகள் யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

RS. 7.7 CRORE, ENGLAND, CREDIT

மற்ற செய்திகள்