"16 நாடுகள்ல பாத்துட்டோம்.. 'இந்த' மாறி 2022 வரைக்கும் பண்ணுங்க!".. புதிய லாக் டவுன் திட்டம் ஆலோசனை!.. ஆய்வாளர்கள் பரபரப்பு கருத்து!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா நோய்த் தொற்றின் சங்கிலியை உடைக்க புதிய ஊரடங்கு வழிமுறைகளை கண்டுபிடித்த இங்கிலாந்து அறிவியலாளர்கள்.
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த 50 நாள் ஊரடங்கு, முப்பது நாள் தளர்வு எனப் புதிய முறையை இங்கிலாந்து அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி 16 நாடுகளின் தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்துள்ளனர். அதன் முடிவில் இடைவெளிவிட்டு ஊரடங்கை நடைமுறைப்படுத்தப் பரிந்துரைத்துள்ளனர்.
முதலில் 50 நாள் ஊரடங்கும், அதன்பின் 30 நாள் தளர்வும் என மாறி மாறி நடைமுறைப்படுத்தினால் நோய்த் தொற்றின் சங்கிலியை உடைக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏற்பாட்டை 2022ஆம் ஆண்டு வரை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் சோதனை, தொடர்பு கண்டறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றைத் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதைப் பின்பற்றினால் வேலையிழப்பையும், நிதிச் சிக்கலையும் தவிர்க்க முடியும் என இந்த ஆராய்ச்சிக்குத் தலைமையேற்ற ராஜீவ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.