Valimai BNS

அரபிக் குத்து பாட்டுக்கு குத்தாட்டம் போட்டாரே தான்சானியா நாட்டு இளைஞர்.. அவருக்கு இந்திய தூதரகம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய பாடல்களுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் பிரபலமான தான்சானியாவைச் சேர்ந்த கிளிபாலை இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் அழைத்து கெளரவித்தனர்.

அரபிக் குத்து பாட்டுக்கு குத்தாட்டம் போட்டாரே தான்சானியா நாட்டு இளைஞர்.. அவருக்கு இந்திய தூதரகம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

பேஸ்புக், ட்விட்டரில் பலரும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் பலரது வீடியோக்கள் பார்ப்பவரிகளின் மனதை கொள்ளை கொள்ளும். இந்தி பாடலோ, தெலுங்கு பாடலோ எந்த பாடலாக இருந்தாலும் அதற்கேற்ப வாயசைத்து அசத்தி வருகிறார் ஒரு இளைஞர்.  தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒரு பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இவர்கள் அண்ணன் தங்கை. தங்களுடைய பகுதியில் இருந்து கொண்டு இந்தி, தெலுங்கு , தமிழ் பாடல்களுக்கு ஏற்ப அழகாக வாய் அசைத்து சிறப்பாக நடனமாடி பலரது மனதை கொள்ளை கொண்டுள்ளனர்.

கிலி பால் நீமா ஜோடி ஆகிய இருவரும் தங்களுடைய பாரம்பரிய உடையை அணிந்து ரீல்ஸ் செய்யும் வீடியோ தான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.  கிளிபால் இந்த வீடியோக்கள் அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதனைத்தொடர்ந்து சொந்தமாக யூ டியூப் சேனலும் நடத்தி வருகிறார். அதிலும் தன்னுடைய இந்த வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

Embassy of India pays tribute to Tanzanian youth

 இந்தியாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடலுக்கும் கிளி பால் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டார். அண்மையில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ அண்டாவா மாமா பாடலுக்கு நடனமாடினார்.  கிளிபாலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் மக்கள் பின்தொடர்கின்றனர். பாலிவுட் பிரபலங்களான ஆயுஷ்மான் குரானா, குல்பனாக், ரிச்சா சந்தா உள்ளிட்டோரும் கிளிபாலை பின் தொடர்கின்றனர்.

Embassy of India pays tribute to Tanzanian youth

வெளிநாட்டினர் பலரும் இந்தியாவில் வெளியாகும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களுக்கு ரியாக்‌ஷன் என்றும், அந்த படங்களில் இடம்பெறும் பாடல்களுக்கு நடனம் ஆடியும் வீடியோக்களை யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.  இந்நிலையில்,  தான்சானியாவில் உள்ள இந்திய தூதரகம் கிளிபாலை நேரில் அழைந்து பாராட்டி கவுரவித்துள்ளது. கிளிபாலை பாராட்டியுள்ள இந்திய தூதரகம், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான இதயங்களை வென்ற சிறப்பு பார்வையாளர் கிளிபால் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kili Paul (@kili_paul)

 

TANZANIA, KILI PAUL, INDIAN EMBASSY, INDIAN SONGS, ARABIC KUTHU

மற்ற செய்திகள்