இதை எங்களால நம்பவே முடியல.. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள் - இந்தியாவில் மீண்டும் தென்பட்ட அரியவகை உயிரினம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மிகவும் அரியவகை  உயிரினமாகக் கருதப்படும் புள்ளிச்  சிறுத்தைகள் இந்தியாவின் நாகாலாந்து மலைப்பகுதிகளில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  சுமார் 3700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் இந்த சிறுத்தைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். கிழக்கு நாகாலாந்தின் கிபிர் மாவட்டத்தில் உள்ள தனமிர் கிராமத்தில் இந்த சிறுத்தைகளின் நடமாட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை எங்களால நம்பவே முடியல.. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள் - இந்தியாவில் மீண்டும் தென்பட்ட அரியவகை உயிரினம்..!

4 சிறுத்தைகள்

இரண்டு பெரிய சிறுத்தைகள் மற்றும் இரண்டு குட்டிகள் என மொத்தம் நான்கு பெரிய புள்ளிச் சிறுத்தைகளை ஆய்வாளர்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளனர். மரங்கள் அதிகம் நிறைந்த வெப்பமண்டல மழைக்காடுகளில் இந்த சிறுத்தைகள் இருப்பது வழக்கம்.

Elusive Clouded leopard found in Nagaland Mountain Forest

ஆனால் வழக்கத்திற்கு மாறாக மரங்களின் உச்சிப் பகுதியில் இந்த 4 சிறுத்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் அந்த  சிறுத்தைகள் இனப்பெருக்கம் செய்து வருவதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

பொங்கல் விடுமுறைக்கு சிறப்புப் பேருந்துகள் இருக்கா?- தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு..!

அரியவகை உயிரினம்

Elusive Clouded leopard found in Nagaland Mountain Forest

இந்த சிறுத்தை குட்டிகளை பார்க்க பிரம்மிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். The Cat News - Winter 2021 ஆய்வறிக்கையில் தங்களது ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த பெரிய புள்ளிச் சிறுத்தைகள் Wild Cats இனத்தில் மிகவும் சிறியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்ஸரே அடிக்கல.. ஆனா ஒரே பந்துல 7 ரன்... டெஸ்ட் போட்டியில் மிரள வெச்சிருச்சுப்பா நியூசிலாந்து..!

அழிந்து வரும் உயிரினங்களில் இந்த சிறுத்தையும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான IUCN ரெட் லிஸ்டிலும் இது இடம் பெற்றுள்ளது.

Elusive Clouded leopard found in Nagaland Mountain Forest

LEOPARD, NAGALAND, FOREST, சிறுத்தை

மற்ற செய்திகள்