"நான் கேட்டது கிடைக்கலைன்னா.. ட்விட்டர் டீலை நிரந்தரமா நிறுத்திடுவேன்".. பரபரப்பை கிளப்பிய மஸ்க்கின் லெட்டர்.. என்ன ஆச்சு?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

போதிய தரவுகள் தனக்கு வழங்கப்படவில்லை என்றால், பிரபல சமூக வலை தலமான ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை நிரந்தரமாக கைவிட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

"நான் கேட்டது கிடைக்கலைன்னா.. ட்விட்டர் டீலை நிரந்தரமா நிறுத்திடுவேன்".. பரபரப்பை கிளப்பிய மஸ்க்கின் லெட்டர்.. என்ன ஆச்சு?

Also Read | உலகின் மிகப்பெரிய மது பாட்டில்.. ஏலத்துல போட்டிபோட்ட கோடீஸ்வரர்கள்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.

அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.

Elon Musk Warns Of Dropping Twitter Deal If Data Not Provided

தற்காலிக முடிவு

ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் மஸ்க்.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க்,"ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ட்விட்டர் தளத்தில் ஸ்பாம் மற்றும் போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடிதம்

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்துக்கு மஸ்க்-ன் வழக்கறிஞர் குழு எழுதியுள்ள கடிதத்தில்,"இணைப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதை போல, நடந்துகொள்ள ட்விட்டர் நிறுவனம் மறுப்பதாக எலான் கருதுகிறார். போதிய தகவல்களை நிர்வாகம் அவருக்கு அளிக்காதது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Elon Musk Warns Of Dropping Twitter Deal If Data Not Provided

மேலும், ட்விட்டர் தளத்தில் உள்ள போலி கணக்குகளின் விபரங்களை அளிக்காத பட்சத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை எலான் நிரந்தரமாக நிறுத்திவைக்கக்கூடும் எனவும் கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளின் விபரங்களை அளிக்காவிடில் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக மஸ்க்  அறிவித்திருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "குப்பைத் தொட்டியில் கிடந்த லாக்கர்.." உள்ள என்ன இருந்துச்சு தெரியுமா..? மதுரையில் பரபரப்பு..!

ELON MUSK, TWITTER DEAL, எலான் மஸ்க்

மற்ற செய்திகள்