யய்யாடி.. அச்சு அசலா என்ன மாரியே இருக்காரே?.. ஷாக்கில் எலான் மஸ்க்கே போட்ட வைரல் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் போட்டுள்ள ட்வீட் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

யய்யாடி.. அச்சு அசலா என்ன மாரியே இருக்காரே?.. ஷாக்கில் எலான் மஸ்க்கே போட்ட வைரல் ட்வீட்..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.

Elon Musk wants to meet his Chinese lookalike

இ லாங் மஸ்க்

இணைய பயன்பாடு பெருகிவிட்ட இந்தக் காலத்தில் பிரபலமானவர்களின் புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் வேறுவிதமாக சித்தரிக்கும் deep fake புகைப்படங்களை மர்ம நபர்கள் வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. சினிமா பிரபலங்கள் துவங்கி உலகின் புகழ்பெற்ற நபர்களை குறிவைத்து இந்த ஆசாமிகள் தங்களது விபரீத பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் போலவே இருக்கும் நபர் என ஒருவரின் புகைப்படம் சமீப காலங்களில் இணையத்தில் அதிகமாக பரவிவருகிறது. இது தற்போது மஸ்க்கின் காதுகளையும் எட்டியுள்ளது.

அவரைப் பார்க்க வேண்டும்

இந்த சீன நபர் உண்மையாகவே இருக்கிறாரா? அல்லது இதுவும் deep fake புகைப்படம் தானா? என்ற குழப்பமே தீராத நிலையில், எலான் மஸ்க் போட்டிருக்கும் சமீபத்திய ட்வீட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Elon Musk wants to meet his Chinese lookalike

இந்நிலையில், நேற்று டிவிட்டர் பக்கத்தில் ஒருவர் எலான் மஸ்கின் புகைப்படத்தையும் அவரைப்போலவே உருவம் கொண்ட சீனாவை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படும் நபரின் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் எலான் மஸ்க்," நிஜமாகவே இப்படி ஒருவர் இருந்தால் அவரை சந்திக்க விருப்பப்படுகிறேன். இந்த காலத்தில் deep fake புகைப்படங்கள் எது என்று கண்டறிய முடிவதில்லை" எனக் கமெண்ட் போட்டுள்ளார்.

கமெண்ட்

ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டிலும் ஒருமுறை இதுபோன்ற புகைப்படம் பகிரப்பட்ட போது, "ஒருவேளை நான் பாதி சீனாவை சேர்ந்தவனாக இருக்கக்கூடும்" என மஸ்க் கமெண்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Elon Musk wants to meet his Chinese lookalike

தன்னைப்போலவே இருக்கும் நபரை சந்திக்க விருப்பப்படுவதாக எலான் மஸ்க் போட்ட ட்வீட் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

 

ELONMUSK, FAKE, DEEPFAKE, எலான்மஸ்க், புகைப்படம்

மற்ற செய்திகள்