"அடுத்து அதைத்தான் வாங்க போறேன்".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்.. பத்திக்கிட்ட ட்விட்டர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்குவதாக தெரிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
வழக்கு
அதன் பிறகு ட்விட்டரில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் இருப்பதாகவும் அதுபற்றிய தகவலை நிறுவனம் பகிரவில்லை என்றுகூறி ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிடுவதாக அறிவித்திருந்தார் மஸ்க். இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. பதிலுக்கு எலான் மஸ்க்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த வழக்கு மீதான விசாரணை வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.
மான்செஸ்டர் யுனைடெட்
இந்நிலையில் பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குவதாக எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், அடுத்த பதிவில் அதனை மறுத்தும் இருக்கிறார் மஸ்க். மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில்,"தெளிவாகச் சொல்வதானால், நான் குடியரசுக் கட்சியின் இடது பாதியையும் ஜனநாயகக் கட்சியின் வலது பாதியையும் ஆதரிக்கிறேன். மேலும், நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இந்த பதிவில் உண்மையாகவே அந்த அணியை வாங்க இருக்கிறீர்களா? என பலர் கேள்வி எழுப்ப அதற்க்கு பதிலளித்துள்ள மஸ்க்,"இது வழக்கமான நகைச்சுவை பதிவு தான். எந்த விளையாட்டு அணியையும் நான் வாங்கவில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்