ஆஹா அடுத்து ஸ்டாண்ட் அப் காமெடி.. அதுவும் அவர்கூடயா..? எலான் மஸ்க் போட்ட பதிவு.. பத்திகிட்ட ட்விட்டர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் நம்பர் 1 பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்-ன் சமீபத்திய ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
Credit: Business standard
ஸ்டாண்ட் அப் காமெடி
பல துறைகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வரும் மஸ்க், தனது சமீபத்திய ட்வீட் மூலம் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். ட்விட்டர் வாசி ஒருவர் எலான் மஸ்கின் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் மஸ்க் சில நகைச்சுவை துணுக்குகளை கூறுகிறார். இந்த வீடியோ பதிவில் கமெண்ட் செய்திருக்கும் மஸ்க்,"கிறிஸ்ராக் அவரது நிகழ்ச்சிகளில் ஒன்றைத் துவங்கி வைக்க என்னை அழைத்தார். நன்றி கிறிஸ். நான் அதிகம் படபடக்காமல் இருக்க முயற்சிப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ் ராக்
கடந்த மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில், ஸ்டாண்ட் அப் காமெடியனும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடி குறித்து பேசினார். இதனால் கோபமடைந்த ஸ்மித் மேடைக்கு சென்று ராக்கை பளார் என்று அறைந்துவிட்டு கீழே இறங்கி சென்றார். இது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் கிறிஸ் ராக் தனது நிகழ்ச்சி ஒன்றை துவக்கி வைக்க தன்னை அழைத்திருப்பதாக எலான் மஸ்க் பதிவிட்டிருக்கும் நிலையில், ஆஸ்கார் மேடையில் நடந்த சம்பவதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
.@Chrisrock invited me to open for one of his shows. Thanks Chris! I will try not to flounder too much.
— Elon Musk (@elonmusk) September 4, 2022
மற்ற செய்திகள்