"இதைச் செய்யுங்க.. இல்லைன்னா வேலையைவிட்டு போய்டுங்க"..சீரியஸான எலான் மஸ்க்.. என்ன ஆச்சு?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

டெஸ்லா ஊழியர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணிபுரியவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என மஸ்க் அனுப்பியதாக சொல்லப்படும் மின்னஞ்சல் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

"இதைச் செய்யுங்க.. இல்லைன்னா வேலையைவிட்டு போய்டுங்க"..சீரியஸான எலான் மஸ்க்.. என்ன ஆச்சு?

Also Read | மனைவி வீட்டுல இல்ல..தோட்டத்துல கேட்ட வினோத சத்தம்.. கணவன் செஞ்ச பகீர் காரியத்தால் பதறிப்போன போலீஸ்..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.

lon Musk tells Tesla employees remote work not acceptable

மெயில்

இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பியதாக சொல்லப்படும் மின்னஞ்சல் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது. அந்த மின்னஞ்சலில்,"வீட்டிலிருந்தே இனி ஊழியர்கள் வேலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. டெஸ்லா ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய விரும்பினால் வாரத்திற்கு குறைந்தது 40 மணிநேரம் டெஸ்லா முதன்மை அலுவலகத்திற்கு வந்து பணிபுரியவேண்டும். இல்லையென்றால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "ஊழியர்கள் அனைவரும் தங்களது பணிகளுக்கு சம்பந்தம் இல்லாத டெஸ்லாவின் பிற மையங்களில் பணிபுரிய கூடாது. அனைவரும் டெஸ்லா முதன்மை அலுவலகத்திற்கு வரவேண்டும்" எனவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி

இந்நிலையில், ட்விட்டர் பயனாளர் ஒருவர்,"இந்த மின்னஞ்சலைப் பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வது ஒரு பழமையான கருத்து என்று நினைக்கும் நபர்களுக்கு ஏதேனும் கூடுதல் கருத்து கூற விரும்புகிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்திருக்கும் எலான் மஸ்க்,"அவர்கள் வேறு எங்காவது வேலை பார்ப்பதுபோல நடிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

lon Musk tells Tesla employees remote work not acceptable

டெஸ்லா ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எலான் மஸ்க் அனுப்பியதாக சொல்லப்படும் மின்னஞ்சல் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Also Read | "இந்த Photo-க்குள்ள டைவ் அடிக்க தோனுது".. ஆனந்த் மஹிந்திராவின் வைரல் பதிவு..!

ELON MUSK, TESLA, TESLA EMPLOYEES, REMOTE WORK, எலான் மஸ்க், டெஸ்லா ஊழியர்கள்

மற்ற செய்திகள்