வானத்துல இருந்து விழுந்த ராட்சத மெஷின்.. ஆடு மேய்க்கப்போன குடும்பத்துக்கு காத்திருந்த ஷாக்.. ஆராய்ச்சியாளர்கள் சொன்ன பகீர் தகவல்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவில் உள்ள ஆட்டு பண்ணையில் விண்வெளியில் இருந்து பிரம்மாண்ட பொருள் ஒன்று விழுந்திருக்கிறது. இது உள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆராய்ச்சியாளர்கள் உண்மையை வெளியிட்டுள்ளனர்.

வானத்துல இருந்து விழுந்த ராட்சத மெஷின்.. ஆடு மேய்க்கப்போன குடும்பத்துக்கு காத்திருந்த ஷாக்.. ஆராய்ச்சியாளர்கள் சொன்ன பகீர் தகவல்.!

Also Read | "என் மகன் பிஸ்கட் கேட்டா.. அன்னைக்கு பஸ்ல போக முடியாது".. தூய்மை பணியாளர் டூ ஜெனரல் மேனேஜர்.. பசியை படிப்பால் வென்ற பெண்மணி..!

ஸ்பேஸ் எக்ஸ்

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நடத்திவருகிறார். செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனத்தின் பிரம்மாண்ட திட்டமான SpaceX Crew-1 கடந்த நவம்பர் மாதம் வெற்றிபெற்றது. அதாவது, பூமியில் இருந்து விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆராய்ச்சியாளர்களை அழைத்துச் செல்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

Elon Musk SpaceX Crew 1 craft smashes onto farmer property

பயங்கர சத்தம்

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த மைக் மைனர்ஸ் என்பவர் சமீபத்தில் வழக்கம்போல தனது வீட்டில் இருந்திருக்கிறார். சற்று தொலைவில் இவருடைய ஆட்டு பண்ணை அமைந்திருக்கிறது. அப்போது, காதை பிளப்பது போல அவருக்கு சத்தம் கேட்டிருக்கிறது. குடும்பத்தினரும் அதை உணரவே அனைவரும் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்திருக்கிறார்கள். அப்போது தூரத்தில் தங்களது ஆட்டு பண்ணைக்கு அருகே ராட்சத பொருள் ஒன்று விழுவதை பார்த்திருக்கின்றனர்.

உடனடியாக அதற்கு அருகில் ஓடிய மைக் மற்றும் அவரது குடும்பத்தினர் கீழே கிடந்த பொருளை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கின்றனர். இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள், இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டனர்.

பாகம்

இந்நிலையில், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக விண்வெளி நிபுணர், பிராட் டக்கர் இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Crew-1 உடைய பகுதிதான் எனக் கூறியுள்ளார். விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும்போது இந்த விண்கலம் உபயோகிக்கப்படும் எனவும், குறிப்பிட்ட தொலைவில் இந்த பகுதி விடுவிக்கப்பட்டுவிடும் எனவும் கூறிய டக்கர், இது விண்வெளியில் அலைவுற்று பூமியில் விழும் என்றார்.

Elon Musk SpaceX Crew 1 craft smashes onto farmer property

பெரும்பாலும், கடலில் பல பகுதிகள் விழுந்தாலும் சில சமயங்களில் இப்படி நிலத்திலும் பகுதிகள் விழுவதாக டக்கர் கூறியுள்ளார். இந்த விண்கல பாகம் 9 மீட்டர் உயரம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கின் இடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளிலும் இந்த பொருட்கள் விழுந்திருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே இந்த ராட்சத பொருட்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Also Read | ஐடி வேலையை விட்டுட்டு கழுதை வளர்க்க போன நபர்.. கைகொடுத்த தொழில்.. மனுஷன் இப்போ லட்சாதிபதி..!

ELON MUSK, ELON MUSK SPACEX CREW, FARMER PROPERTY

மற்ற செய்திகள்