2022 எப்படி இருந்துச்சு..? ஒத்த மீம்-ல எலான் மஸ்க் செஞ்ச பங்கம்.. பத்திக்கிட்ட டிவிட்டர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் பகிர்ந்துள்ள மீம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

2022 எப்படி இருந்துச்சு..? ஒத்த மீம்-ல எலான் மஸ்க் செஞ்ச பங்கம்.. பத்திக்கிட்ட டிவிட்டர்..!

Also Read | வருஷத்துல எத்தன நாள் வேணும்னாலும் லீவ் எடுத்துக்கங்க..வாயை பிளந்த ஊழியர்கள்.. அருமையான கம்பெனியா இருக்கும்போலயே..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து பல்வேறு விண்வெளி திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ். தனது ஸ்டார்லிங்க் திட்டத்தின் மூலமாக, விண்வெளிக்கு 2000 செயற்கை கோள்களை ஏவும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது ஸ்பேஸ் எக்ஸ். இந்த திட்டத்தின் மூலமாக உலகம் முழுவதும் குறைவான கட்டணத்தில் அதிவேக, இணைய சேவையை வழங்க முடியும் என்கிறார் மஸ்க்.

Elon Musk shares tiger meme to explain how 2022 has been for him

மீம்

சமகாலத்தில் மிகப்பெரிய விஷயங்களை கூட மிகச் சுலபமாக விளக்க மீம்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, நகைச்சுவைகளுக்காக உருவாக்கப்படும் மீம்களுக்கு இணையதளம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனாலேயே இணைய வெளிகளில் பகிரப்படும் இத்தகைய மீம்கள், அதிவேகத்தில் பகிரப்படுகின்றன.

 

டிவிட்டர் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் எப்போதும் அதிரடி கருத்துக்களை வெளியிட்டுவரும் மஸ்க், தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனக்கு 2022 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதை விளக்கும் விதமாக புலி மீம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் மஸ்க். இந்த டிவிட்டை ஒரு மில்லியன் மக்கள் லைக் செய்துள்ளனர். 85 ஆயிரம் பேர் மஸ்கின் இந்த மீம் குறித்து கமெண்ட் போட்டுள்ளனர்.

Elon Musk shares tiger meme to explain how 2022 has been for him

தனக்கு 2022 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதை மீமாக எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர, தற்போது அந்த மீம் வைரலாக பரவி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ELON MUSK, TIGER MEME, எலான் மஸ்க், மீம்

மற்ற செய்திகள்