Tesla-வில் வேலை.. Twitter-ல் விளம்பரம் செய்த எலான் மஸ்க்.. கவனம் பெறும் டுவிட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிய எலான் மஸ்க் டுவிட்டரில் விளம்பரம் செய்துள்ளது கவனம் பெற்று வருகிறது.

Tesla-வில் வேலை.. Twitter-ல் விளம்பரம் செய்த எலான் மஸ்க்.. கவனம் பெறும் டுவிட்..!

Also Read | "கதவு, ஜன்னல்'ன்னு எல்லாமே பூட்டி கெடந்து இருக்கு.." பதறிய அக்கம் பக்கத்தினர்.. கதவைத் திறந்ததும் வாசலில் கிடந்த கடிதம்...

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் முன்னணி பணக்காரருமான எலான் மஸ்க், சமீபத்தில் டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சர்வதேச அளவில் கவனம் பெறும் நபராக மாறினார்.

இந்த சூழலில் சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிய டுவிட்டரில் எலான் மஸ்க் விளம்பரத்தை வெளியிட்டார். அதில், ‘டெஸ்லா ஒரு ஹார்ட்கோர் வழக்கு துறையை உருவாக்குகிறது. அங்கு நாங்கள் நேரடியாக வழக்குகளை தொடங்குகிறோம் மற்றும் செயல்படுத்துகிறோம். அந்த குழு நேரடியாக என்னிடம் தெரிவிக்கும். இந்த திறனுக்கான சான்றுகளை விவரிக்கும் 3 முதல் 5 பதில்களை அனுப்புங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

தற்போது எலான் மஸ்க்கின் இந்த பதிவுக்கு பலரும் பதிலளித்து வருகின்றனர். ஒருபுறம் இதை வாய்ப்பாக கருதி பலர் அதற்கு தொடர்புடைய பதில்களை பதிவிட்டு வந்தாலும், மறுபக்கம் சிலர் கிண்டலான பதில்களையும் அளித்து வருகின்றனர். எலான் மஸ்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

 

Also Read | 3 வருஷத்துக்கு அப்புறம் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்… அறிவிப்பு வந்ததும் போட்ட வைரல் Tweet

 

Nenjuku Needhi Home
ELON MUSK, TESLA, SPACEX, TESLA JOB, TWITTER, JOB ADVERTISEMENT, POST

மற்ற செய்திகள்