"24 மணிநேரமும் அதுதான் மண்டைல ஓடிட்டே இருக்கு"..கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த 'தெறி' பதில்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் செய்துள்ள ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Also Read | 6 மாசமா வயித்துவலியால துடிச்சுப்போன நபர்.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பாத்துட்டு மிரண்டுபோன டாக்டர்கள்..
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
தற்காலிக முடிவு
ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் எலான் மஸ்க். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க்,"ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ட்விட்டர் தளத்தில் ஸ்பாம் மற்றும் போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
வைரலான மீம்
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக மஸ்க் அறிவித்ததை தொடர்ந்து, அவர் டெஸ்லா நிறுவனத்தின் மீது ஆர்வம் செலுத்தவில்லை என்ற நோக்கில் மீம் ஒன்று சமூக வலை தளங்களில் வைரலானது.
இந்நிலையில் அந்த மீமை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "உண்மையில் என்னுடைய 5% சதவீத நேரத்தை ட்விட்டர் ஒப்பந்தத்துக்காக செலவிட்டுவருகிறேன். இது ஒன்றும் ராக்கெட் அறிவியல் கிடையாது. நேற்று கிகா டெக்சாஸில் இருந்தேன். இன்று ஸ்டார்பேசில் இருக்கிறேன். என்னுடைய சிந்தையில் 24/7 நேரமும் டெஸ்லா தான் இருக்கிறது. இந்த மீம் நன்றாக இருந்தாலும் இது உண்மையில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
tweet :
To be clear, I’m spending <5% (but actually) of my time on the Twitter acquisition. It ain’t rocket science!
Yesterday was Giga Texas, today is Starbase. Tesla is on my mind 24/7.
So may seem like below, but not true. pic.twitter.com/CXfWiLD2f8
— Elon Musk (@elonmusk) May 19, 2022
டெஸ்லாவிற்கு போதிய நேரம் செலுத்தவில்லை என்ற நோக்கில் எலான் மஸ்க்கை குறிவைத்து, மீம் ஒன்று வைரலான நிலையில் அதற்கு மஸ்க்கே பதில் அளித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்