"உங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா.. ட்விட்டரை நான் வச்சுக்கவா?" யூடியூப் பிரபலத்தின் கேள்விக்கு எலான் மஸ்க் கொடுத்த 'தெறி' பதில்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் ட்விட்டரை தான் வைத்துக்கொள்ளலாமா என யூடியூபர் ஒருவர் எலான் மஸ்கிடம்  கேட்க,அதற்கு மஸ்க் அளித்திருக்கும் பதில் பலரையும் புன்னகைக்க வைத்திருக்கிறது.

"உங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா.. ட்விட்டரை நான் வச்சுக்கவா?" யூடியூப் பிரபலத்தின் கேள்விக்கு எலான் மஸ்க் கொடுத்த 'தெறி' பதில்..!

Also Read | கல்விக்கு வயது தடை அல்ல.. 87 வயசுல 10-வது பாஸ்.. முன்னாள் முதல்வரின் விடாமுயற்சி.. குவியும் வாழ்த்துக்கள்..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.  ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில்  ட்விட்டர்  நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.

Elon Musk says he will hand Twitter over to YouTube star MrBeast

பரபரப்பை கிளப்பிய ட்வீட்

நேற்று முன்தினம் மஸ்க் தனது  ட்விட்டர் பக்கத்தில்," ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால், உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பதிவில் பல்வேறு மக்கள், எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக கமெண்ட் செய்துவந்தனர்.

Elon Musk says he will hand Twitter over to YouTube star MrBeast

இந்நிலையில் மஸ்கின் இந்த பதிவில் யூடியூப் பக்கத்தில் MrBeast  அழைக்கப்படும் ஜிம்மி டொனால்ட்சன் என்னும் இளைஞர் வித்தியாசமான கமெண்ட் ஒன்றை போட்டிருந்தார். அவர்," அப்படி நடந்துவிட்டால்  ட்விட்டரை நான் வைத்துக்கொள்ளலாமா?" எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

மஸ்கின் பதில்

ஜிம்மி டொனால்ட்சன் போட்ட கமென்டிற்கு உடனடியாக பதில் அளித்த எலான் மஸ்க் "ஓகே" என பதிவிட்டுள்ளார். இந்த கமெண்ட் தற்போது டிவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

Elon Musk says he will hand Twitter over to YouTube star MrBeast

ரஷ்யா தங்களது இணைய சேவையை தாக்கி வருவதன் காரணமாக, ஸ்டார்லிங் திட்டத்தின் மூலமாக இணைய சேவையை வழங்கும்படி உக்ரைன் அரசு எலான் மஸ்கிடம் கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து உக்ரைனுக்கு ஸ்டார்லிங் சேவையை அளிப்பதாக அறிவித்தார் மஸ்க். இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்த ரோஸ்கோஸ்மோஸ் அமைப்பின் இயக்குனர் டிமிட்ரி ஒலெகோவிச் ரோகோசின், ரஷ்ய ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை என ஒரு பதிவையும் மஸ்க் நேற்று பகிர்ந்திருந்தார்.

அந்த அறிக்கையில், டிமிட்ரி ஒலெகோவிச் ரோகோசின் நேரடியாக எலான் மஸ்க்கின் நடவடிக்கைள் குறித்து விமர்சித்திருந்தார். அதற்குப் பின்னரே மரணம் குறித்து எலான் மஸ்க் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ELON MUSK, TWITTER, YOUTUBE STAR MRBEAST, எலான் மஸ்க், யூடியூபர்

மற்ற செய்திகள்