Naane Varuven M Logo Top

"எலான் குடும்பத்துக்கு சொந்தமா எமரால்ட் சுரங்கம் இருக்கு".. கொளுத்திப்போட்ட நபர்.. மஸ்க் போட்ட பொளேர் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் நம்பர் 1 பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் குடும்பத்திற்கு சொந்தமாக எமரால்ட் சுரங்கம் இருப்பதாக தெரிவித்திருந்த பேராசிரியர் ஒருவருக்கு மஸ்க் கொடுத்த ரிப்ளை பற்றித் தான் தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

"எலான் குடும்பத்துக்கு சொந்தமா எமரால்ட் சுரங்கம் இருக்கு".. கொளுத்திப்போட்ட நபர்.. மஸ்க் போட்ட பொளேர் ட்வீட்..!

Also Read | 75 வருஷத்துக்கு முன்னாடி எடுக்கப்பட்ட ராணியின் புகைப்படம்.. யப்பா.. இது பொக்கிஷம் போலயே..!

எலான் மஸ்க்

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Elon Musk reply on US professor over emerald mine claims

எமரால்ட் சுரங்கம்

பெர்க்லி பேராசிரியரும் மற்றும் முன்னாள் அமெரிக்க தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளருமான ராபர்ட் ரீச் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பில் கேட்ஸ், ஜெப் பெஸோஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சுயமாக பில்லியனர்களாக வளர்ந்தது ஜோடிக்கப்பட்ட கதை என ரீச் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் சொந்தமாக எமரால்ட் சுரங்கம் வைத்திருந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும் ரீச் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பில் கேட்ஸ்-ன் தாயார் ஐபிஎம் நிறுவனத்தின் உதவியுடன் மைக்ரோசாஃப்டை உருவாக்க பில் கேட்ஸ்க்கு உதவியதாகவும், அமேசான் நிறுவனத்தை துவங்கிய பெஸோஸ் தனது பெற்றோரிடம் இருந்து பணம் பெற்றதாகவும் அந்த வீடியோவில் ரீச் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகிவந்தது.

மஸ்க் போட்ட கமெண்ட்

தென்னாப்பிரிக்காவில் எமரால்ட் சுரங்கம் வைத்திருந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் எலான் மஸ்க் என ரீச் தனது வீடியோவில் குறிப்பிட்டிருந்த நிலையில் இது சமூக வலை தளங்களில் பேசுபொருளானது. இந்நிலையில் மஸ்க் இந்த பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார். அதில்,"நீங்கள் ஒரு முட்டாள் மற்றும் பொய் கூறுபவர் (You both an idiot and a liar)" என காட்டமாக குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Also Read | யம்மாடி.. தொழிலதிபர் அதானியின் ஒருநாள் வருமானம் இவ்வளவு கோடியா..? முழு விபரம்..!

ELON MUSK, US PROFESSOR, EMERALD MINE CLAIMS, ELON MUSK REPLY ON US PROFESSOR

மற்ற செய்திகள்