Naane Varuven M Logo Top

நெனச்சதை சாதிச்ச எலான் மஸ்க்.. முடிவிற்கு வரும் நீண்டநாள் போராட்டம்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே நீண்டநாள் நடைபெற்றுவந்த சட்ட போராட்டம் முடிவிற்கு வந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நெனச்சதை சாதிச்ச எலான் மஸ்க்.. முடிவிற்கு வரும் நீண்டநாள் போராட்டம்.. முழு விபரம்..!

Also Read | 500 மீ ஆழமுள்ள பள்ளத்தாக்கு.. திருமணத்தில் கலந்துகொள்ள சென்ற உறவினர்களுக்கு நேர்ந்த சோகம்.. பிரதமர், குடியரசுத்தலைவர் இரங்கல்..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.

Elon Musk proposes the deal to buy Twitter At the Original Price

அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.

வழக்கு

ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில்  ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் அதிகமாக இருப்பதாகவும் இதுகுறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை என்றும் கூறிய மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிடுவதாக அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்னும் சில வாரங்களில் துவங்க இருந்தது.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், இதுதொடர்பாக கடிதம் ஒன்று ட்விட்டர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை நிரூபிக்கும் வகையில், மஸ்க் தரப்பின் கடிதம் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஒரு பங்குக்கு $54.20 என்ற பரிவர்த்தனையை முடிப்பதே தங்களுடைய நோக்கம் எனவும் ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.

Elon Musk proposes the deal to buy Twitter At the Original Price

ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கு, இன்னும் சில வாரங்களில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், மஸ்க் தரப்பு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு குறித்து உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | புயலுக்கு பயந்து வீட்டுக்குள்ள முடங்கிய குடும்பம்.. அத்தனை பேரையும் காப்பாத்திய ஒற்றை ஜன்னல் .. வைரலாகும் புகைப்படம்..!

ELON MUSK, DEAL, BUY, TWITTER, ORIGINAL PRICE, எலான் மஸ்க்

மற்ற செய்திகள்