"ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து நான் விலகணுமா?".. உலக அளவில் கவனம் பெற்ற எலான் மஸ்க் கருத்துக்கணிப்பு!!..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள கருத்துக்கணிப்பு உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

"ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து நான் விலகணுமா?".. உலக அளவில் கவனம் பெற்ற எலான் மஸ்க் கருத்துக்கணிப்பு!!..

Also Read | அட.. சச்சினுக்கு நடந்தது மாதிரி மெஸ்ஸிக்கும் நடந்திருக்கு! உலக கோப்பை வெற்றிக்கு பின் உள்ள சுவாரஸ்யமான சம்பவங்கள்

அமெரிக்காவில் வசித்து வரும் எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக் கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க்.

இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க். இதனிடையே, வாசனை திரவிய தொழிலும் அவர் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அப்படி ஒரு சூழலில், ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கிய பின்னர், அவரையும் ட்விட்டரையும் சுற்றி பல்வேறு பரபரப்பு சம்பவங்களும் அரங்கேறி வந்தது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பதவிகளில் இருந்த நபர்களை வேலையை விட்டு நீக்கியது, ட்விட்டர் அலுவலகத்தில் பெட்ரூம் வைத்தது, ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது என எலான் மஸ்க் மேற்கொண்ட பல நடவடிக்கைகள், உலக அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.

Elon Musk poll in twitter about step down from head of twitter

இந்த நிலையில் தான், ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டுமா? இல்லையா? என்ற புதிய கருத்துக் கணிப்பு ஒன்றை எலான் மஸ்க் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன் என்றும் தனது ட்வீட்டில் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில மணி நேரங்களில் இந்த கருத்துக் கணிப்புகள் முடியவுள்ள நிலையில், சுமார் 1 கோடி பேருக்கும் மேல் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "டிசம்பர் 18 மெஸ்ஸி கையில் கோப்பை இருக்கும்".. 7 வருடம் முன்பே கணித்த ரசிகர்..?? FIFA2022

ELON MUSK, ELON MUSK POLL, TWITTER

மற்ற செய்திகள்