"பணக்காரங்கனா எல்லோரும் அப்படித்தான் இருக்கணுமா?".. தன்னை விட்டு பிரிந்துபோன மகள் குறித்து எலான் மஸ்க் உருக்கம்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தன்னுடைய மகள் குறித்து மனம் திறந்திருக்கிறார்.

"பணக்காரங்கனா எல்லோரும் அப்படித்தான் இருக்கணுமா?".. தன்னை விட்டு பிரிந்துபோன மகள் குறித்து எலான் மஸ்க் உருக்கம்.. முழு விபரம்..!

Also Read | "பில் கட்டுற அளவுக்கு என்கிட்ட காசு இல்ல.. நான் பாத்திரம் கழுவுறேன்".. இந்தியாவையே திரும்பி பார்க்க வச்ச கோடீஸ்வரர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் சோகமான பக்கம்..!

எலான் மஸ்க்

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Elon Musk opened up about his relationship with his daughter Vivian

பிரிந்த மகள்

கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் என்பவரை கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் மஸ்க். இந்த தம்பதிக்கு 2004 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. அதன்பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து பெற்றது. இந்நிலையில், இந்த தம்பதியின் மகன் சேவியர் அலெக்ஸ்சாண்டர் மஸ்க் சமீபத்தில் தனது பெயரையும் பாலினத்தையும் மாற்ற விண்ணப்பித்திருந்தார்.

எலான் மஸ்க்குடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும், தன்னுடைய பெயர் விவியன் ஜென்னா வில்சன் எனவும் மாற்றக்கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் அவர். இந்த நிகழ்வு குறித்து உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டது.

Elon Musk opened up about his relationship with his daughter Vivian

இந்நிலையில், சமீபத்தில் இதுகுறித்து மனம் திறந்திருக்கிறார் எலான் மஸ்க். இதுபற்றி பேசிய அவர்,"அவள் சென்ற கல்லூரிகளில் இருக்கும் சில பேர் இப்படியான சிந்தனை உடையவர்கள். பொதுவாக பணக்காரனாக இருந்தால் அவர்கள் கெட்டவர்கள் என்று கருதுகிறார்கள். இது பின்னாளில் மாறலாம். இருப்பினும் மற்ற குழந்தைகள் என்னிடம் அன்பாகவே நடந்துகொள்கின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Also Read | "நீங்க எந்த வேலைல இருந்தாலும்.. இந்த ஒரு பாடத்தை மட்டும் Life-ல கத்துக்கோங்க".. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த அட்வைஸ்.. வீடியோ..!

ELON MUSK, RELATIONSHIP, DAUGHTER, VIVIAN JENNA WILSON, XAVIER ALEXANDER MUSK

மற்ற செய்திகள்