கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த 'அசோக் எல்லுசுவாமி' டெஸ்லா நிறுவனத்தின் இயக்குனரானது எப்படி? எலான் மஸ்க் பகிர்ந்த தகவல்
முகப்பு > செய்திகள் > உலகம்டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் குழு இயக்குனர் அசோக் எல்லுசுவாமியை தனது நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்தது எப்படி என்பதை விவரித்துள்ளார் டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்.
பொதுவாகவே அனைவருக்கும் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய கம்பெனிகளில் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் இருப்பதுண்டு. ஒருகாலத்தில் இந்தியர்களுக்கு எட்டா கனியாக இருந்த நிலையில், தற்போது உலக அளவில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அந்த வகையில் டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக மாறியுள்ளது.
அசோக் எல்லுசுவாமியை டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்தது எப்படி?
இந்த நிலையில் அசோக் எல்லுசுவாமியை தனது நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்தது எப்படி என எலான் மஸ்க் கூறுகையில், 'டெஸ்லா நிறுவனம் ஆட்டோ பைலட் குழுவை தொடங்க உள்ளது என நான் ட்வீட் செய்திருந்தேன். அந்த ட்வீட் மூலம் முதன் முதலில் ஆட்டோ பைலட் குழுவில் தேர்வு செய்யப்பட்டது அசோக் தான்” என ட்வீட் மூலம் பகிர்ந்துள்ளார்.
2015-இல் போடப்பட்ட ட்வீட்:
கடந்த 2015-இல் டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவுக்கான பணியாட்களை தேர்வு செய்ய இருப்பதாக ட்வீட் செய்திருந்தார் எலான் மஸ்க். அந்த துறையில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் சொல்லி இருந்தார். இதில் பல நாடுகளில் இருந்து பலர் வின்னப்பிருன்தனர். அதில் முதல் ஆளாக அசோக் தேர்வு செய்யப்பட்டார்.
கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தவர்:
இந்தியாவை சேர்ந்த அசோக், கிண்டி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் முடித்தவர். படிப்பு முடிந்த பிறகு WABCO வாகன கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் வோக்ஸ்வேகன் எலக்ட்ரானிக் ரிசர்ச் கூடத்தில் பணியாற்றி உள்ளார். டெஸ்லாவில் மென்பொருள் வல்லுனராக பணிக்கு சேர்ந்துள்ளார். தற்போது அந்த நிறுவனத்தின் இயக்குனராக உயர்ந்துள்ளார். அர்பணிப்பும், ஆர்வமும் இருந்து தகுதியை வளர்த்துக் கொண்டால் அசோக் போன்று உலகின் தலைசிறந்த கம்பெனியில் முக்கிய இடத்தை அடைய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.
மற்ற செய்திகள்