அய்யோ.. “தாஜ்மஹாலை பார்த்த வருசத்தை தப்பா போட்டுட்டேன்”.. எலான் மஸ்க்கின் ‘அம்மா’ பதிவிட்ட டுவீட் செம வைரல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்தாஜ்மஹாலை பார்த்த ஆண்டை தவறாக பதிவிட்டதாக எலான் மஸ்க்கின் தாய் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
பேடிஎம் சிஇஓ விஜய் ஷேகர் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இந்தியாவில் முதல் டெஸ்லா காரை தாஜ்மஹாலில் அறிமுகம் செய்யுங்கள்’ எனக் கோரிக்கை விடுத்தார். அதற்கு எலான் மஸ்க், ‘இந்தியாவில் ஆக்ராவில் அற்புதமான இடம், வியப்புக்குரிய இடம். 2007-ம் ஆண்டு நான் வந்தபோது தாஜ்மஹாலைப் பார்த்தேன். உண்மையிலே உலக அதிசயங்களில் ஒன்று’ எனத் தெரிவித்தார்
அதேபோல் எலான் மஸ்க்கின் தாய் மே மஸ்க், கடந்த 2007-ம் ஆண்டு தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்ததாகவும், அது மிகவும் அழகாக இருந்ததாகவும் டுவிட்டரில் குறிப்பிட்டுருந்தார்.
இந்த நிலையில் தாஜ்மஹாலுக்கு சென்ற ஆண்டை தவறாக பதிவிட்டதாக மே மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘2012-ம் ஆண்டு தாஜ்மஹாலுக்கு சென்றதை 2007 என்று தவறாக பதிவிட்டு விட்டேன். அதை மாற்றுவதற்கு எடிட் பட்டன் எங்கே?’ என மே மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Not 2007, 2012. Where is that edit button?😣😣 https://t.co/WXg5Ze5W2A
— Maye Musk (@mayemusk) May 9, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/
மற்ற செய்திகள்