"இப்படி ஒருத்தரை நான் பார்த்ததே இல்ல".. இந்திய இளைஞரை சந்தித்த எலான் மஸ்க்.. யாருப்பா இந்த பிரணாய்..?
முகப்பு > செய்திகள் > உலகம்இந்திய இளைஞர் ஒருவர் தனது நீண்டநாள் நண்பரும் உலகத்தின் நம்பர் 1 பணக்காரருமான எலான் மஸ்க்கை சந்தித்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
நட்பு
டாடா குழுமத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பர் ஆக பணிபுரிந்து வருபவர் பிரணாய் பாதோல். இவர் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களில் உள்ள விண்ட்ஷீல்டில் ஏற்படும் சிரமத்தை சுட்டிக் காட்டி எலானுக்கு ட்விட்டர் வாயிலாக மெசேஜ் அனுப்பியிருந்தார். அடுத்த இரண்டு நிமிடத்தில் அதற்கு பதில் அளித்திருந்த மஸ்க் "அந்த கோளாறு விரைவில் சரி செய்யப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து செவ்வாய் கிரக ஆராய்ச்சி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்து வந்தனர். அவ்வப்போது இவர்கள் இடையேயான கருத்துப்பரிமாற்றம் உலக அளவில் கவனம் பெற்றும் வந்தது.
சந்திப்பு
இந்நிலையில், எலான் மஸ்க்கை அவரது தொழிற்சாலைக்கு சென்று சந்தித்திருக்கிறார் பிரணாய். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"டெக்சாஸ் ஜிகாஃபாக்டரியில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட அடக்கமான மற்றும் பணிவான நபரை நான் பார்த்ததில்லை. நீங்கள் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகமாக திகழ்கிறீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
It was so great meeting you @elonmusk at the Gigafactory Texas. Never seen such a humble and down-to-earth person. You're an inspiration to the millions 💕 pic.twitter.com/TDthgWlOEV
— Pranay Pathole (@PPathole) August 22, 2022
மற்ற செய்திகள்