LIGER Mobile Logo Top
Tiruchitrambalam Mobile Logo Top

எலான் மஸ்க்கின் அரிய புகைப்படங்களை ஏலத்துக்கு விடும் 'கல்லூரி' காதலி.. "பிறந்தநாளுக்கு அவரு எழுதுன கடிதம் தான் ஹைலைட்டே"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், உலக அளவில் நம்பர் 1 கோடீஸ்வரர் ஆவார்.

எலான் மஸ்க்கின் அரிய புகைப்படங்களை ஏலத்துக்கு விடும் 'கல்லூரி' காதலி.. "பிறந்தநாளுக்கு அவரு எழுதுன கடிதம் தான் ஹைலைட்டே"

Also Read | கல்யாணத்து அன்னைக்கு வழுக்கி விழுந்த மாப்பிள்ளை.. "ஹாஸ்பிடல்'ல அட்மிட் பண்ணப்போ தான்".. உண்மை தெரிய வந்துருக்கு!!

இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். உலகளவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்கி வருகிறது.

உலகளவில் முன்னணி தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரராக இருந்தாலும், எப்போதும் ட்விட்டர் பக்கத்திலும் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் எலான் மஸ்க்.

Elon musk ex girlfriend jennifer gwynne revealed his never seen photos

நெட்டிசன்கள் கேட்கும் ஆக்கபூர்வமான கேள்விகளுக்கு பதிலளிப்பது, மீம்ஸ்களை பகிர்வது, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிப்பது என ட்விட்டரிலும் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் எலான் மஸ்க். அவரது தொழில் மற்றும் ட்விட்டர் பதிவுகள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது ஏராளமான செய்திகள் இணையத்தில் வைரலாகும்.

Elon musk ex girlfriend jennifer gwynne revealed his never seen photos

இந்நிலையில், எலான் மஸ்க்கின் கல்லூரி பருவத்தில் காதலியாக இருந்த Jennifer Gwynne தற்போது எலான் மஸ்க்குடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அதனை ஏலம் விடுவதாக அவர் அறிவித்துள்ளார். தற்போது எலான் மஸ்க் இருக்கும் புகைப்படங்கள் அதிகம் வெளி வந்தாலும், அவரது கல்லூரி காலத்தில் உள்ள புகைப்படங்கள் என்பது மிக அரியதாகும். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், தற்போது அந்த புகைப்படங்களை ஜெனிஃபர் ஏலத்தில் விடுவதாக அறிவித்துள்ளார்.

Elon musk ex girlfriend jennifer gwynne revealed his never seen photos

தற்போது தனது வளர்ப்பு மகனுடன் வசித்து வரும் ஜெனிஃபர், கல்லூரி காலத்தில் எலான் மஸ்க்குடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை RR Auction மூலம், வளர்ப்பு மகனின் கல்விக் கட்டணத்திற்கு பணம் திரட்டுவதற்காக விற்பனை செய்கிறார். மேலும், இவற்றில் எலான் மஸ்க், கடந்த 1995 ஆம் ஆண்டு, ஜெனிஃபருக்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கடிதமும், எலான் மஸ்க் கையெழுத்திட்ட டாலர் நோட்டு ஒன்றும் உள்ளே இருக்கிறது.

Elon musk ex girlfriend jennifer gwynne revealed his never seen photos

இது தொடர்பாக பேசும் எலான் மஸ்க்கின் முன்னாள் காதலி ஜெனிஃபர், "எலான் யாரிடமும் பேசாமல் மிகவும் ரிசர்வாக இருப்பார். ஆனால் எப்போதாவது அவர் மிகவும் சில்லியாக நடந்து கொண்டு, என்னை சிரிக்க வைப்பார்" என கூறி உள்ளார். மேலும், தங்களின் ஒரு வருட காதல் இனிமையாக இருந்தது என்றும் ஜெனிஃபர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய இளம் வயதில், எலான் மஸ்க் இருக்கும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Aslo Read | 100 வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி.. வேகமா வந்து விலங்கு மாட்டிய போலீஸ்.. "இப்படி கூட Arrest பண்ணுவாங்களா??"

ELON MUSK, ELON MUSK EX GIRLFRIEND, REVEAL, PHOTOS

மற்ற செய்திகள்