'இந்தியாவில் டெஸ்லா கார்கள் எப்போது கிடைக்கும்'?.. நீண்ட நாள் ரகசியத்தை... போட்டு உடைத்த எலான் மஸ்க்!.. செம்ம வைரல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவில் டெஸ்லா கார்கள் அறிமுகப்படுத்துவது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

'இந்தியாவில் டெஸ்லா கார்கள் எப்போது கிடைக்கும்'?.. நீண்ட நாள் ரகசியத்தை... போட்டு உடைத்த எலான் மஸ்க்!.. செம்ம வைரல்!

உலகின் பிரபல முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் கருதப்படுகிறது. இந்த நிறுவனம் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

பல்வேறு நாடுகளில் தங்கள் வாகனங்களை சந்தைப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள டெஸ்லா நிறுவனம், மின்சார வாகனங்கள் தொடர்பாக அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், பிரபல யூடியூபரான மதன்கெளரி ட்விட்டரில், டெஸ்லா நிறுவனத்தின் வாகனங்களை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

 

 

அவரது பதிவுக்கு பதிலளித்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், "நாங்களும் இதனை செய்யவே விரும்புகிறோம். எனினும், உலகின் பெரிய நாடுகளின் வரிசையில் இந்தியாவில் தான் இறக்குமதி வரிகள் அதிகம். மேலும், மின்சார வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போலவே கருதப்படுகின்றன. இது 'பருவநிலை மாற்றத்திற்கு' எதிரான இந்தியாவின் செயல்பாடுகளுடன் பொருந்தக்கூடியதாக இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்